மனிதன் வாழ்வில் தண்ணீருக்கு எப்போதும் முக்கியத்துவம் இருக்கிறது. இந்நிலையில் ஆயுர்வேத மருத்துவம் தண்ணீர் குடிக்கும் முறையை பரிந்துரை செய்துள்ளது. இந்த முறையில் தண்ணீர் குடித்தால், உடலின் ஆரோக்கியம் மேம்படும் என்று கூறப்படுகிறது.
எப்போதும் நின்றுகொண்டு தண்ணீர் குடிக்க கூடாது. அப்படி தண்ணீர் குடித்தால் நமது உடலில் உள்ள திரவங்களின் நிலை மாறும். இதனால் நமது மூட்டுகளில் நீர் சேர்ந்து ஆர்த்ரைட்டிஸ் ஏற்படலாம். இதனால் தண்ணீரை உட்கார்ந்து குடிக்க வேண்டும்.

ஒரே அடியாக ஒரு கிளாஸ் தண்ணீரை குடிக்க கூடாது இதனால் வயிறு உப்பிவிடும். மேலும் மெதுவாக தண்ணீர் குடித்தால் ஜீரணத்திற்கு உதவும்.
இதுபோல குளிர்சாதனப்பெட்டியில் இருந்து நேரடியாக எடுக்கும் குளிச்சியான நீரை குடிக்க கூடாது. சாதரண தண்ணீருடன் கலந்து குடிக்க வேண்டும்.
அதிக குளிர் நீர் ஜீரணிக்கும் செயல் முறையை பாதிக்கிறது. மேலும் சூடான தண்ணீர் ஜீரணத்திற்கு உதவும். மேலும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.
காலை விழித்தவுடன், சூடான தண்ணீரை குடிக்க வேண்டும். இது உடலில் உள்ள எல்லா நச்சுதன்மைகளையும் வெளியேற்றிவிடும்.