சர்க்கரை நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய உணவு முறை குறித்து பல்வேறு தகவல்களை மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இதனை பின்பற்றுவதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது டாக்டர் நித்யா’ ஸ் வரம் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
இன்றைய காலகட்டத்தில் மாற்றம் அடைந்து வரும் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றால் பெரும்பாலானோருக்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இந்த சர்க்கரை நோயின் விளைவுகளை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார்.
முதலில் உடலில் சர்க்கரை அதிகரிக்காமல் இருப்பதற்கு பொட்டாசியம், ஜிங்க், மெக்னீசியம், காப்பர் சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக நிறைய மாதுளையை எடுத்து கொள்ளலாம். சிலருக்கு மாதுளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் அதிகரிக்கும் என்கிற பயம் இருக்கும். ஆனால் மாதுளையை சாப்பிடுவதற்கு என்று ஒரு முறை உண்டு. அப்படி சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது.
மாரடைப்பு வராமல் தடுக்கும் உணவுகள் | Foods to avoid heart attack | tamil health library | dr.nithya
டிப்ஸ் 1: நல்ல நாட்டு மாதுளை வாங்கி வெள்ளை தோலுடன் பழத்தையும் எடுத்து ஜூஸ் போட்டு குடிக்கலாம். தினமும் காலையில் இப்படி குடிப்பதால் சுகர் அதிகரிக்காது.
டிப்ஸ் 2: அந்த மாதுளை தோலை சிறிது சிறிதாக நறுக்கி கசாயம் வைத்தும் குடிக்கலாம். அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் மாதுளை தோல், சோம்பு சிறிது போட்டு கொதிக்க விடவும். இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
இதனால் கருப்பை பிரச்சனைகள் கூட சரியாகும். மேலும் மாதுளையை இந்த முறையில் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வராது.
டிப்ஸ் 3: உணவில் பச்சை சுண்டைக்காய் சாப்பிடலாம். பச்சை சுண்டைக்காய் எடுத்து உலர்த்தியும் சாப்பிடலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.