வெயில் காலத்தில் வால்நட்: எப்படியெல்லாம் சாப்பிடலாம்?

வெயில் காலங்களிலும் வால்நட்டை நாம் சாப்பிடலாம். இதில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் உள்ளது. இந்த பேட்டி ஆசிட் நமது மூளை வளர்ச்சிக்கும், வீக்கத்தை குறைக்கவும், இதயத்தின் ஆரோக்கியத்தை சீராக்கவும் உதவுகிறது.

வெயில் காலங்களிலும் வால்நட்டை நாம் சாப்பிடலாம். இதில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் உள்ளது. இந்த பேட்டி ஆசிட் நமது மூளை வளர்ச்சிக்கும், வீக்கத்தை குறைக்கவும், இதயத்தின் ஆரோக்கியத்தை சீராக்கவும் உதவுகிறது.

author-image
WebDesk
New Update
வால்நட்

வெயில் காலங்களிலும் வால்நட்டை நாம் சாப்பிடலாம். இதில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் உள்ளது. இந்த பேட்டி ஆசிட் நமது மூளை வளர்ச்சிக்கும், வீக்கத்தை குறைக்கவும், இதயத்தின் ஆரோக்கியத்தை சீராக்கவும் உதவுகிறது. வால்நட்டில் புரத சத்து, நார்சத்து உள்ளது. ஒரு ஆரோக்கியமான உடல் எடையை வைத்துக்கொள்ள உதவும். நீங்கள் ஒரு நாளைக்கு 28 கிராமிற்கு அதிகமாக வால்நட் சாப்பிடக் கூடாது. இந்நிலையில் வெப்ப தன்மை இருப்பதால் வெயில் காலத்தில் சாப்பிடுவது சரியாக இருக்காது என்று கூறப்படுகிறது. ஆனால் வால்நட்டை பின்வரும் முறையில் நாம் சாப்பிடலாம்.

Advertisment

ஆனால் வால்நட்டை தண்ணீரில் இரவு ஊறவைத்து, அதை காலையில் நாம் சாப்பிடலாம். இதனால் ஜீரணம் சரியாகும்.

பாலை கொதிக்க வைத்து அதில் வால்நட்டை சேர்க்கலாம். மேலும் வால்நட்டை சிறிது சூடான பாலில், சேர்த்து ஊற வைத்து அதை தூங்கச் செல்லும் முன் குடிக்கலாம்.

மேலும் பாலில் சேர்த்து, சாக்லேட், அல்லது பாதாம் கீர் பொடி கலந்து மில்க் ஷேக் செய்து குடிக்கலாம்.

Advertisment
Advertisements

இதுபோல அல்வா அல்லது காய்கறி சாலடில் வால்நட் சேர்த்து சாப்பிடலாம்.

வால்நட் பால் செய்து சாப்பிடலாம்.  இரவில் வால்நட்டை தண்ணீரில் ஊறவைத்து, அந்த வால்நட்டை புதிய தண்ணீர் சேர்த்து அரைத்து, அதன் பாலை எடுக்க வேண்டும். மேலும் அதில் தேன் அல்லது பேரிச்சம்பழங்களை கலந்து சாப்பிடலாம்.

இந்நிலையில் பெருஞ்சீரகம், வால்நட், கொத்தமல்லி ஆகியவற்றை நன்றாக வறுக்க வேண்டும். இதை நமக்கு பிடித்த எந்த உணவுடனும் சேர்ந்து சாப்பிடலாம்.   

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: