/indian-express-tamil/media/media_files/2025/02/24/2089X1GiBrlhTQ1Ihu3x.jpg)
இந்த விட்டமின் டி உடலுக்கு என்ன நன்மை செய்கிறது, விட்டமின் டி கிடைக்கிறது, எந்த உணவில் எவ்வளவு கிடைக்கிறது. சூரிய ஒளி எந்த நேரத்தில் உடலில் பட்டால் விட்டமின் டி கிடைக்கும் என்பதை தனது யூடியூப் சேனலில் டாக்டர் அருண்குமார் கூறியுள்ளார்.
விட்டமின் டி ரொம்ப முக்கியமானது, உடலில் எலும்புகளைத் தவிர பல்வேறு இடங்களில், இதயம், நீரிழிவு நோய், கேன்சர், நோய் எதிர்ப்பு சக்தி என்று பல்வேறு இடங்களில் உதவுகிறது. இப்படியான விட்டமின் டியை எப்படி எடுத்துக்கொள்வது என்று டாக்டர் அருண்குமார் கூறியுள்ளார்.
இந்த விட்டமின் டி உடலுக்கு என்ன நன்மை செய்கிறது, விட்டமின் டி கிடைக்கிறது, எந்த உணவில் எவ்வளவு கிடைக்கிறது. சூரிய ஒளி எந்த நேரத்தில் உடலில் பட்டால் விட்டமின் டி கிடைக்கும் என்பதை தனது யூடியூப் சேனலில் டாக்டர் அருண்குமார் கூறியுள்ளார்.
இந்த விட்டமின் டி யாருக்குமே புடிக்காத கொலஸ்ட்ராலில் இருந்துதான் உருவாகிறது. சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்கள் நம்முடைய தோலில் இருக்கக்கூடிய 7 டிஹைட்ரா கொலஸ்ட்ரால் மீது படும்போது அது ஆக்டிவேட் ஆகி அது பிரிவிட்டமின் டி ஆகிறது. அது சில மாற்றங்கள் மூலம், கோலிக்அல்சிஃபெரால் என்று மாறுகிறது, அதுதான் விட்டமின் டி 3.
இந்த கோலிக்அல்சிஃபெரால் விட்டமின் டி 3 என்பது கல்லீரலுக்கு சென்று 25 ஹைட்ராக்ஸ் டி3 என்று மாறுகிறது. அதற்கு பிறகு, அது கிட்னியில் போய் 1, 25 டைஹைட்ராக்ஸி விட்டமின் டி என்று மாறுகிறது.
இது சிறுநீரகங்களில் கால்சியம் பாஸ்பரஸ் வெளியே போகவிடாமல் தடுக்கும். உடலில் கால்சியம் உறிஞ்ச உதவியாக இருக்கும். எலும்புகளில் கால்சியம் பாஸ்பரஸ் படிய உதவும். விட்டமின் டி ரிசெப்டார்ஸ் மூலம் பல நன்மைகளை செய்கிறது.
ஒரு நாளைக்கு விட்டமின் டி எவ்வளவு தேவை என்றால், 1 வயதுக்கு கீழே இருக்கிற குழந்தைகளுக்கு 400 இண்டர்நேஷ்னல் யூனிட் விட்டமின் டி தேவை. 1 வயதில் இருந்து 70 வயது உள்ளவர்களூக்கு 600 இண்டர்நேஷ்னல் யூனிட் விட்டமின் டி தேவை. அதற்கு மேல் உள்ள வயதினருக்கு 800 இண்டர்நேஷ்னல் யூனிட் விட்டமின் டி தேவை.
சூரிய ஒளியில் விட்டமின் டி இருப்பது எல்லோருக்கும் தெரியும். பலரும் வெயிலில் சுற்றுபவர்களாக இருந்தாலும் டெஸ்ட் பண்ணும்போது விட்டமின் டி கம்மியாக இருக்கிறதே என்று கூறுவார்கள்.
இந்த விட்டமின் டி மதியம் வெயிலில் 11-2 மணி வரை மட்டுமே சூரியனின் புற ஊதாக் கதிர்கள் தோல் மீது படும்போது கிடைக்கும். அப்படி வெயிலில் இருந்தால், அரை மணி நேரத்தில் வெள்ளையாக இருப்பவர்களுக்கு 5,000 - 10,000 இண்டர்நேஷ்னல் யூனிட் விட்டமின் டி உற்பத்தியாகும். கருப்பாக இருப்பவர்களுக்கு விட்டமின் டி கொஞ்சம் குறைவாக 3,000 - 5,000 யூனிட் உற்பத்தியாகும்.
சூரிய ஒளியில் அல்லது வெயிலில் செல்ல முடியாதவர்கள், மதியம் சாப்பாட்டு நேரத்தில், முழுக்கை சட்டை மடித்துவிட்டுக்கொண்டு 10-15 நிமிடம் வெயில் படும்படி நடக்கலாம். இதன் மூலம், 1000 - 2000 யூனிட் விட்டமின் டி கிடைக்கும்.
சூரிய ஒளியில் இருப்பதன் மூலம் விட்டமின் டி கிடைக்கும். ஆனால், உணவில் விட்டமின் டி கிடைக்குமா என்றால், உணவில் பெரிய அளவில் எல்லாம் விட்டமின் டி கிடைக்காது. மத்தி மீன் 100 கிராம் சாப்பிட்டால், 250 யூனிட் விட்டமின் டி கிடைக்கலாம். முட்டையின் மஞ்சள் கருவில் 40-50 யூனிட் விட்டமின் டி கிடைக்கலாம். மஞ்சள் கரு மூலம் எடுப்பது சரியாகனதாக இல்லை. ஆனால், மீன் வாரத்துக்கு 2 நாளைக்கு சாப்பிடலாம்.
வெளிநாடுகளில் உணவில் செயற்கையாக கலக்கப்படுகிற விட்டமின் டி2 அந்த அளவுக்கு பயன் கொடுக்காது. உண்மையில், உணவில் பெரிய அளவில் விட்டமின் டி கிடைக்கிற அளவுக்கு ஆதாரம் இல்லை. தினமும் 10 முட்டை சாப்பிடுவதும் கடினம், மத்தி மீன் தினமும் 1/4 கிலோ சாப்பிடுவதும் கடினம். அதனால், உடலுக்கு தேவையான விட்டமின் டி ரொம்ப எளிதாகக் கிடைக்க வேண்டும் என்றால், மதியம் 15 - 20 நிமிடம் வெயிலில் நடப்பதுதான் சரி. அதற்கு மேல் விட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள் விட்டமின் டி சத்து மாத்திரை எடுத்துக்கொள்ளலாம். இதை உங்கள் மருத்துவரைக் கேட்டு எடுத்துக்கொள்ளலாம் என்று டாக்டர் அருண்குமார் கூறுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.