வெந்தியத்தின் பயன்கள் சிலவற்றை பற்றி நமக்கு முன்பே தெரிந்திருந்தாலும், சில முக்கிய உடல் நலக் கோளாறுக்கு தீர்வாக இருக்கிறது.
இதில் நார்சத்து, மெக்னிஷியம்,வைட்டமின் பி6 இருக்கிறது. இவை ஆரோக்கியமான சக்தியை உடலுக்கு கொடுக்கிறது. மேலும் இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸ்லிடண்டட் மற்றும் பிளாபாய்ட்ஸ் இதய நோய் ஏற்படாமல் தடுக்கும்.
இதில் இருக்கும் பண்புகள் கார்போஹைட்ரேட்டை உடல் எடுத்துக்கொள்ளும் வேகத்தை குறைக்கிறது. இதனால் இன்சுலின் செயல்பாடு சீராகும். சாப்பிடும் முன்பு வெந்தயத்தை எடுத்துக்கொண்டால் டைப் 2 சர்க்கரை நோய் குணமாகும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
மேலும் இவை ஜீரணத்திற்கு உதவுகிறது. இது மலச்சிக்க்லை தடுக்க உதவுகிறது. இவை ஜீரணிக்கும் என்சைம்களை தூண்டுவதால், இதனால் வயிறு உப்புதல் மற்றும் வாயுத் தொல்லை ஏற்படாது. இது கொலஜன் என்பதை உற்பத்தி செய்து வயதாவதை தடுக்கும்.
குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் சுரக்க உதவும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்நிலையில் தினமும் நாம் இரண்டு வேளை வெந்தயம் சாப்பிட வேண்டும் என்று கூறப்படுகிறது. 8 முதல் 10 கிராம் வரை ஒரு நாளைக்கு நாம் வெந்தயம் சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது.
கர்ப்பிணி பெண்கள், உடல் உபாதைகள் இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு இதை சாப்பிட வேண்டும்.வெந்தயத்தை இரவில் தண்ணீர் சேர்த்து ஊறவைத்து, அடுத்த நாள் தண்ணீரை வடிகட்டி குடிக்கலாம்.