/indian-express-tamil/media/media_files/2025/02/07/2nBPC1gIckJ5JyQk6qEO.jpg)
இந்த டிப்ஸ் மூலம் 3 நாட்களுக்கு இட்லி மாவு புளிக்காமல் வைத்து பயன்படுத்தலாம். image screengrab from YouTube Sai Tips
தென் இந்தியாவின் தினசரி உணவுகளில் ஒன்றாக இட்லி மாறியுள்ளது. இந்த இட்லி செய்வதற்கு மாவு அரைப்பது, அதை புளிக்க வைப்பது, பிறகு அதை இட்லியாக அவித்து எடுப்பது என்று ஒரு பெரிய வேலை.
இட்லி, தோசை செய்வதற்கு சிலர் வீட்டில் மாவு அரைத்து, அதை ஒரு பாத்திரத்தில் வெளியே வைப்பார்கள். அந்த மாவை வழக்கமாக ஒரு பாத்திரத்தில் வெளியே சாதாரணமாக வைப்பார்கள். அந்த மாவு புளித்து பொங்கி வந்ததும் அதை ஃபிரிட்ஜில் வைத்து விடுவார்கள். ஆனால், வீட்டில் ஃபிரிட்ஜ் இல்லாதவர்கள், அல்லது வீட்டில் ஃபிரிட்ஜ் பழுதடைந்துவிட்ட நேரத்தில் இந்த டிப்ஸ் மூலம் 3 நாட்களுக்கு இட்லி மாவு புளிக்காமல் வைத்து பயன்படுத்தலாம்.
பொதுவாக இட்லி, தோசை செய்வதற்கு மாவு அரைத்தால், எவர் சில்வர் பாத்திரத்தில் மாவை வைப்பார்கள். மாவு ஃபிரிஜே இல்லாமல் புளிக்காமல் 3 நாளைக்கு கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என்றால், உங்கள் வீட்டில் மண்பானை இருந்தால் அதில் மாவை ஊற்றி வையுங்கள். மண் பானையில் மாவு வைக்கும்போது, மண் பானை குளிர்ச்சியாக இருப்பதால் புளிக்காமல் 2-3 நாட்களுக்கு நன்றாக இருக்கும்.
அதே போல, உங்கள் வீட்டில் மண்பானை இல்லை என்றால், ஒன்னும் பிரச்னை இல்லை. உங்கள் வீடிட்ல் உள்ள ஒரு அகலமானப் பாத்திரத்தை ஊற்றுங்கள். அதில் சில்லென தண்ணீரை ஊற்றி, அதில் இட்லி மாவு பாத்திரத்தை வைத்துவிடுங்கள். இதனால், மாவு சூடாகாமல் புளிக்காமல் இருக்கும். இதை 2-3 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
அதே போல, இட்லி, தோசை செய்வதற்கு அரைத்த மாவு இருக்கும் பாத்திரத்தில் வாழை இலை அல்லது வெற்றிலையைக் கொண்டு உள்ளே வைத்து மூடிவிடுங்கள், இதனால், மாவு புளிக்காமல் இருக்கும். அதே நேரத்தில், நீங்கள் மாவின் உள்ளே மூடி வைக்கும் இலையை 1 நாளைக்கு ஒருமுறை மாற்றிவிடுவது நல்லது. அப்போதுதான், மாவு புளிக்காமல் நன்றாக இருக்கும். உங்கள் வீட்டில் ஃபிர்ட்ஜ் இல்லையென்றால் இந்த டிப்சை ஃபாலோ பண்ணி பாருங்க.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.