உடம்பில் உள்ள தேவையற்ற ஊளைச்சதையை குறைக்க என்னவெல்லாமோ செய்கிறீர்களா? அதாவது உடல் எடை அதிகரிக்க செய்யும் கை, இடுப்பு, தொடை பகுதிகளில் அதிகமாக ஊளைச்சதை இருக்கும். இதை குறைப்பதற்கு டாக்டர் உஷா நந்தினி கூறும் குறிப்புகளை பார்க்கலாம். இது குறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தக்காளி இரண்டு எடுத்த அதை சுடுதண்ணீரில் போட்டு இரண்டு நிமிடம் வேகவைத்து மேலுள்ள தோலை உரித்து எடுக்கவும். பின்னர் இந்த தக்காளியை பிழிந்து வெறும் ஜூஸ் மட்டும் எடுத்து கொள்ளவும்.
அதில் உள்ள விதைகளை தூக்கிப்போட்டு விட வேண்டும். பின்னர் அந்த ஜூஸில் வெதுவெதுப்பான சுடுதண்ணீர் சிறிது ஊற்றி இரண்டு சிட்டிகை சீரகம், மிளகு பொடி, உப்பு போட்டு கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதை குடிக்க வேண்டும்.
Easy weight loss drink!
இல்லையென்றால் காலையில் 11:00 மணி போல இதனை குடிக்கலாம். தொடர்ந்து இதனை குடித்து வர உடம்பில் ஆங்காங்கே இருக்கும் ஊளை சதை கரையும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.