பண்டிகை காலங்களில் இனிப்பு வகைகளுக்கு தனி இடம் உண்டு. குறிப்பாக, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் ஜிலேபியை சாப்பிட தனிக்கூட்டமே உண்டு. அத்தகை சுவைமிக்க ஜிலேபியை, வீட்டில் இருக்கிற இட்லி மாவை உபயோகித்தே ஈஸியா செய்யலாம். எளிமையான குறிப்பை இங்கு வழங்கியுள்ளோம்.
தேவையான பொருட்கள் :
- புளித்த இட்லி மாவு - ஒரு கப்
- கேசரி பவுடர் - 1/2 ஸ்பூன்
- மைதா மாவு - 1 1/4 கரண்டி
பாகு தயாரிக்க :
- சர்க்கரை - 2 கப்
- தண்ணீர் - 1 கப்
- எலுமிச்சை - 1/2
செய்முறை :
2 அல்லது 3 நாள் ஆட்டி நன்கு புளித்த அரிசி மாவை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில், கேசரி பவுடரை நிறத்திற்காக சேர்க்க வேண்டும்.
பின்பு, அதில் மைதாமாவு சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும்.
இதற்கிடையில், சர்க்கரை பாகு தயாரிக்க அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி சர்க்கரை போட்டு, கொதிக்க வையுங்கள். அதன் மீது, எலுமிச்சை சாறு பிழிந்துகொள்ளுங்கள்.
தொடர்ந்து, கரைத்து வைத்துள்ள மாவை மருதாணி கோன் வடிவில் உள்ளது பேப்பரில் ஊற்றி வைத்துக்கொள்ள வேண்டும். முணையில் சிறு துளையிட்டால், ஜிலேபி முறுக்கலுக்கு உதவுயாக இருக்கும்.
கடாயில் எண்ணெய் காய்ந்ததும் மாவை இரண்டு சுத்து முறுக்கு போல் சுற்றி எடுங்கள். அவை பொண்ணிறமாக வந்ததும், அப்படியே எடுத்து முன்பு தயார் செய்துள்ள சர்க்கரைப் பாகில் சேர்த்து 5 நிமிடங்கள் ஊறவிடுங்கள். நீண்ட நேரம் ஊற விட்டால் மொறுமொறுப்பு போய்விடும். அவ்வளவு தான், சுலையான ஜிலேபியை தட்டில் வைத்து பரிமாறி ருசிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil