ஜாம் (Jam) குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இனிப்பாக இருப்பதால் குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவர். தோசை, இட்லி-க்கு என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிடுவர். வேலைக்கு செல்பவர்கள் கூட பிரெட், ஜாம் வைத்து காலை உணவு சாப்பிடுவர். பிரெட், ஜாம் சுலபமான காலை உணவாகி விடுகிறது. அந்தவகையில் சந்தைகளில் கிடைக்கும் ஜாம்களில் செயற்கை சுவையூட்டிகள், நிறமூட்டிகள் (Flavors) சேர்கின்றன. இதனால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதற்கு எளிதாக வீட்டிலேயே ஜாம் செய்யலாம். வீட்டிலேயே செய்யலாம் ஆப்பிள் ஜாம் (Apple jam) செய்வது குறித்துப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஆப்பிள் - 2
சர்க்கரை - 1கப்
லெமன் - 1/2
தண்ணீர் - 1/2 கப்
செய்முறை
ஆப்பிளை நன்றாக கழுவி அதன் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து 2 நிமிடங்கள் கழித்து சூடானதும், நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை போட்டு தண்ணீர் சேர்க்கவும். 10 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். மசித்து எடுக்கும் பதத்திற்கு வர வேண்டும்.
பிறகு அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும். கலவை கொஞ்சம் எடுத்து தட்டில் வைத்து பதம் பார்க்கவும். ஜாம் பதத்திற்கு உள்ளதா என பார்க்கவும். அடுத்து அதில் லெமன் பிழிந்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவு தான் ஆப்பிள் ஜாம் ரெடி. காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து பயன்படுத்தலாம். 2 மாதம் வரை பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“