குழந்தைகளுக்கு பிஸ்கட் மிகவும் பிடிக்கும். அம்மாவிடம் அடம்பிடித்தாவது வாங்கி சாப்பிடுவர். அதுவும் இனிப்பு உள்ள க்ரீம் பிஸ்கட் என்றால் சொல்லவே வேண்டாம். விரும்பி சாப்பிடுவர். பெரும்பாலும் ஸ்நாக்ஸ் உணவாக பிஸ்கட் சாப்பிடுவர். எப்போதும் கடையில் வாங்கி பிஸ்கட் கொடுப்போம். ஆனால் வீட்டிலேயே கூட பிஸ்கட் செய்யலாமாம். டேட்ஸ் குக்கீஸ் எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
பிஸ்கட் செய்ய தேவையான பொருட்கள்
மைதா - 100 கிராம்,
வெண்ணெய் - 100 கிராம்,
டேட்ஸ் - 10 துண்டுகள்
நாட்டு சர்க்கரை - 100 கிராம்,
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
டேட்ஸ் சிரப்பு - 20 மி.லி.கிராம்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், டேட்ஸ் சிரப்பு, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு பீட் செய்துகொள்ளவும். பிறகு மைதா, பிரவுன் சுகர் (நாட்டு சர்க்கரை), பேக்கிங் பவுடர் சலித்து எடுத்து வெண்ணெய் உடன் சேர்த்து பிசைந்துகொள்ளவும். இப்போது அதில் டேட்ஸை சிறிது சிறிதாக நறுக்கி பிசைந்து வைத்துள்ள மாவுடன் சேர்க்கவும். பின் அந்த மாவுக் கலவையை குக்கீஸ் கட்டரைக் கொண்டு வேண்டிய வடிவத்தில் கட் செய்து எடுத்துக் கொள்ளவும். பிறகு, ப்ரீ-ஹீட் செய்த ஓவனில் 3000oC- 15 நிமிடம் பேக் செய்து சுவையான டேட்ஸ் குக்கீஸ் ரெடி. அவ்வளவு தான். குழந்தைகளுக்கு கொடுங்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
குறிப்பு: ப்ரீ-ஹீட் 2500oC-ற்கு 10 நிமிடம் ஹீட் செய்ய வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/