ஒரு சொட்டு எண்ணெய் கூட வேணாம்... சாஃப்ட் சப்பாத்தி கேரண்டி; இத ட்ரை பண்ணுங்க!
துளி கூட எண்ணெய் சேர்க்காமல் எவ்வாறு சப்பாத்தி சுடலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். குறிப்பாக, இந்த சப்பாத்தி மிகவும் சாஃப்டாக இருப்பதால் எல்லோருக்கும் பிடிக்கும்.
துளி கூட எண்ணெய் சேர்க்காமல் எவ்வாறு சப்பாத்தி சுடலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். குறிப்பாக, இந்த சப்பாத்தி மிகவும் சாஃப்டாக இருப்பதால் எல்லோருக்கும் பிடிக்கும்.
சப்பாத்தி என்பது ஆரோக்கியமான உணவு தான். ஆனால், அத்துடன் அதிகமாக எண்ணெய் சேர்த்து சுடும் போது, அதன் ஆரோக்கியம் குறைந்து விடுகிறது. அந்த வகையில், துளி கூட எண்ணெய் சேர்க்காமல் எவ்வாறு சப்பாத்தி செய்யலாம் என்று காண்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
தண்ணீர், உப்பு மற்றும் கோதுமை மாவு
செய்முறை:
Advertisment
Advertisements
அடுப்பில் கடாய் வைத்து அதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம். தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் தேவையான அளவு உப்பு, மூன்று கப் கோதுமை மாவு சேர்த்து கலக்க வேண்டும். இத்துடன் கூடுதலாக தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் கிடையாது.
மாவை நன்றாக கலக்கிய பின்னர், பாத்திரத்தை மூடி விடலாம். இந்த மாவு ஆறியதும் அதனை பிசையத் தொடங்கலாம். இதனுடன் எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. எனவே, சப்பாத்தி எண்ணிக்கைக்கு தேவையான அளவு, மாவை சிறிய உருண்டைகளாக பிரித்து எடுக்கலாம்.
மீதமுள்ள மாவை மூடி வைத்து அடுத்த நாளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில், இந்த மாவு அவ்வளவு சீக்கிரத்தில் காய்ந்து விடாது. இப்போது, மாவை மெலிதாக திரட்டி மிதமான சூட்டில் தோசைக் கல்லில் சுட்டு எடுக்கலாம். சப்பாத்தி சுடும் போதும் எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியம் கிடையாது.
இவ்வாறு செய்தால் எண்ணெய் சேர்க்காமல் ஆரோக்கியமான சப்பாத்தியை தயாரிக்கலாம். மேலும், இது மறுநாள் வரை சாஃப்டாகவே இருக்கும்.