குழந்தைகள் விரும்பி சாப்பிடும் தேன் மிட்டாய் இட்லி மாவை பயன்படுத்தி எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்
இட்லி மாவு – ஒரு கப்
ஆப்ப சோடா – கால் டீஸ்பூன்
சர்க்கரை – ஒரு கப்
கலர்பொடி – ஒரு சிட்டிகை
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து பாகு தயார் செய்யவும். இந்த பாகு ஒரு கம்பி பதம் வரும் வரை காத்திருக்கவும்.
அதன்பிறகு இட்லி மாவில் உப்பு, ஆரஞ்சு கலர் பொடி, பேக்கிங் அல்லது ஆப்ப சோடா சேர்த்து கிளரவும். இதற்கு புளித்த மாவை பயன்படுத்தக் கூடாது. புதிதாக, அரைத்த மாவை பயன்படுத்த வேண்டும்.
இந்த மாவை சிறிய உருண்டைகளாக எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும். அதன்பிறகு இந்த பொறித்து எடுத்த உருண்டைகளை சர்க்கரை பாகில் சேர்க்கவும்.
இந்த கலவை 2 மணி நேரம் கழித்து, எடுத்தால் சுவையான தேன் மிட்டாய் ரெடி. நீங்களும் வீட்டில் செய்து பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“