இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் காலை உணவாக பலரும் எடுத்துக்கொள்வது இட்லி தான். இந்த இட்லிக்கு சாம்பார் மட்டுமல்லாமல், பலவகையாக சட்னியுடன் சேர்த்து சாப்பிடுவது வழக்கம். அந்த வகையில் இட்லி தோசை என அனைத்திற்கும் பயன்படுத்தும் வகையில் கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி கீரை – 2 கட்டு (சிறியது)
கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
பூண்டு – 5 பல்
இஞ்சி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 3
வரமிளகாய் – 5
தக்காளி – 2
புளி – நெல்லிக்காய் அளவு
பெருங்காய் பொடி – காஸ் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து நன்றாக வறுக்கவும். அதில் அதில் பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்க்கவும்.
இந்த கலவை நன்றாக வதங்கியதும் அதில், பச்சை மிளகாய், வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து, தக்காளியை சேர்க்கவும். இந்த சட்னிக்கு வெங்காயம் சேர்க்க கூடாது.
தக்காளி ஓரளவுக்கு வெந்தவுடன், அதில் புளி, தேவையான அளவு உப்பு, பெருங்காய பொடீ ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். அதன்பிறகு தண்டுடன் நறுக்கிய கொத்தமல்லி கீரையை சேர்க்கவும்.
இந்த கலவை நன்றாக வதங்கியதும் ஒரு மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அதன்பிறகு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கிண்டினால் சுவையான மல்லி சட்னி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“