ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெசிபி... சமோசா மொறுமொறுன்னு இருக்க இதுதான் சீக்ரெட்: இப்படி ட்ரை பண்ணுங்க!
ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு சமோசா எப்போதும் ரொம்ப நல்லா டேஸ்டியாக இருக்கும். வீட்டிலேயே சமோசா இப்படி செய்து பாருங்க. சமோசா மொறுமொறுன்னு இருக்க இதுதான் சீக்ரெட்.
ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு சமோசா எப்போதும் ரொம்ப நல்லா டேஸ்டியாக இருக்கும். வீட்டிலேயே சமோசா இப்படி செய்து பாருங்க. சமோசா மொறுமொறுன்னு இருக்க இதுதான் சீக்ரெட்.
ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு சமோசா எப்போதும் ரொம்ப நல்லா டேஸ்டியாக இருக்கும். கடைகளில் செய்யும் சமோசா எண்ணெய் அதிகமாக இருக்கும், சுகாதாரமாக இருக்காது என்ற அச்சம் இருந்தால், வீட்டிலேயே சமோசா இப்படி செய்து பாருங்க. சமோசா மொறுமொறுன்னு இருக்க இதுதான் சீக்ரெட்.
Advertisment
முதலில் சமோசா செய்வதற்கு மாவில் கொஞ்சம் உப்பு சேர்த்து, எண்ணெய் கொஞ்சம் விட்டு, பிறகு, தண்ணீர் கொஞ்சம் விட்டு, மாவு பிசையுங்கள். பிறகு, மாவை சின்ன சின்ன உருண்டைகளாக பிரித்து உருட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து, சப்பாத்தி போல, மாவு உருண்டிகளை வட்டமாக தேய்த்துக்கொள்ளுங்கள். இப்போது ஸ்டவ்வைப் பற்ற வைத்து மிதமான தீயில் வைத்துக்கொள்ளுங்கள். அதில் நான் ஸ்டிக் தவாவை வைத்து, அதில் சாப்பாத்தி போல தேய்த்ததை போட்டு, லேசாக இரண்டு பக்கமும் சூடு பண்ணி எடுத்துக்கொள்ளுங்கள்.
Advertisment
Advertisements
அதை இப்போது சதுர வடிவில் கட் பண்ணுங்கள். பிறகு, அதை நீள செவ்வக வடிவில் துண்டுகளாக கட் பண்ணுங்கள். இதே போல எல்லா உருண்டைகளையும் செய்து வைத்துகொள்ளுங்கள். கட் பண்ண சின்ன சின்ன துண்டுகளை எண்ணெயில் போட்டு பொரித்து, அதை சமோசா ஸ்டஃபில் கலந்துகொள்ளுங்கள்.
சமோசா ஸ்டஃபில் வழக்கம் போல, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, தேவையான அளவு மிளாய் தூள், தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்துவிடுங்கள். வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கைப் போட்டு கலந்துகொள்ளுங்கள். பிறகு, அதை ஏற்கெனவே நீள செவ்வக வடிவில் கட்பண்ணி வைத்துள்ளதை எடுத்து, அதில் சமோசா ஸ்டஃப் வைவைத்து சமோசா வடிவில் மடித்து மூடிவிடுங்கள்.
பிறகு, அதை நீங்கள் வழக்கம் போல, எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சமோசா தயார். இந்த சமோசா நன்றாக மொறுமொறுன்னும் டேஸ்டியாகவும் இருக்கும்.