இந்த முட்டை கிரேவியை சப்பாத்தி, தோசை, இட்லி, சோறு உடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். முட்டை பிரியர்களுக்கு, முட்டை கிரேவி இப்படி செய்து கொடுத்தால் ரொம்ப பிடிக்கும்.
அவசரத்திற்கு சுவையான முட்டை டிஷ் செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களா? அப்போது இந்த முட்டை கிரேவிதான் சரியான டிஷ். முட்டை பிரியர்களே சுவையான முட்டை கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முட்டை கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
2 டீஸ்பூன் எண்ணெய்,
பிரியாணி இலை 1
ஸ்டார் பூ 2
ஏலக்காய் 2
கிராம்பு 2
மிளகு கால் டீஸ்பூன்
சீரகம் ஒரு டீஸ்பூன்
வெங்காயம் 2 பொடியாக் நறுக்கியது
இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் 2
தக்காளி 3
மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
மல்லித்தூள் 1 டீஸ்பூன்
சீரகத்தூள் 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா 1/2 டீஸ்பூன்
உப்பு 2 சிட்டிகை
முந்திரி பருப்பு பேஸ்ட் சிறிது அளவு
மிளகுத்தூள் 1/2 டீஸ்பூன்
அவிச்ச முட்டை
2 பச்சை முட்டை
செய்முறை:
ஸ்டவ்வைப் பற்ற வைத்து, ஒரு கடாயை எடுத்து வையுங்கள், அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஒரு பிரியாணி இலை ஒரு ஸ்டார் பூ இரண்டு ஏலக்காய், இரண்டு கிராம்பு, கால் டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்துக்கொள்ளுங்கள். நல்லா பொரிஞ்ச உடனே இரண்டு பொடியா நறுக்குன வெங்காயம், இரண்டு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் கீறி போட்டு, மூணு தக்காளி பொடியாக நறுக்கியது சேர்த்து விடுங்கள். நல்லா மசித்து விட்ட மாதிரி வதக்கி விடுங்கள். ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் மல்லித்தூள், கால் டீஸ்பூன் சீரகத்தூள் அரை டீஸ்பூன் கரம் மசாலா, இரண்டு சிட்டிகை உப்பு சேர்த்து நல்லா கலந்து விடுங்கள். ஒரு கப் தண்ணீர் சேர்த்து நல்ல கொதி வந்த உடனே முந்திரி பருப்பு பேஸ்ட், அரை டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து, இரண்டு நிமிஷம் மூடி வச்சி எடுத்தா ஒரு அருமையான முட்டை கிரேவி தயார். இந்த முட்டை கிரேவியை, சப்பாத்தி, இட்லி தோசை சோறு உடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். நிச்சயமாக உங்களுக்கும் பிடிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“