பிரட்டில் வகை வகையான ரெசிபி செய்து சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிரட் சாப்பிடுவர். பிரட் அப்படியே கூட சாப்பிடலாம். டோஸ்டு செய்து சாப்பிடலாம். பிரட் ஆம்லெட் சாப்பிடலாம், இப்படி நிறைய ரெசிபி செய்து சாப்பிடலாம். இப்போது இங்கு கடைகளில் கிடைக்கும் பூண்டு பிரட் (Garlic bread) எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம். சுலபமாக வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
All purpose flour (மாவு) - 1 1/2 கப்
yeast - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் – 3 டீஸ்பூன்
அரைத்த பூண்டு - 3 டீஸ்பூன்
ஓரிகனோ - 1/2 டீஸ்பூன்
சில்லி பிளேக்ஸ் - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
சீஸ் - 3 டீஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் yeast, சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். பின் 5 -10 நிமிடங்கள் விட்டுவிடவும். இப்போது வேறு பாத்திரத்தில் மாவு சேர்த்து yeast, எண்ணெய், பூண்டு, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
அடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து மாவை பிசையவும். சப்பாத்தி மாவு போல் பிசையவும். மாவை கட் செய்து பீட்சாவிற்கு (base) செய்வது போல் தட்டையாக செய்து கொள்ளவும். இதில் ஒருபுறத்தில் வெண்ணெய் தடவி மிளகு தூள், சில்லி பிளேக்ஸ், ஓரிகனோ தூவி விடவும். மேலே சீஸ் வைக்கவும்.
மற்றொரு மாவு எடுத்து வைத்து சீஸை மூடவும். இப்போது குக்கரில் வைத்து வேக வைக்கவும். மேலே உப்பு தூவி வைக்கவும். பாத்திரத்தின் அடியில் வைக்காமல் மேலே வைக்கவும். 25-30 நிமிடங்கள் வேக வைக்கவும். பொன்னிறிமாக வேக வைத்தப்பின் எடுக்கலாம். சூடாக பரிமாறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“