Advertisment

இட்லி மாவில் உடனடி போண்டா; புளிப்பு சுவையை போக்க இந்த 2 பொருள் சேருங்க: செஃப் தீனா ரெசிபி

புளித்த இந்த இட்லி மாவில் எப்படி தோசை ஊற்றுவது என நமக்கு குழப்பம் இருக்கும். அந்த குழப்பத்தில் இருந்து விடுபடவும், புளித்த சுவையில் உள்ள மாவில் ருசியான போண்டா சுடவும் செஃப் தீனா பரிந்துரை செய்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
How to Make Instant Bonda with left over idli batter Chef Deena recipe in tamil

செஃப் தீனா ஸ்டைலில் ருசியான போண்டா எப்படி தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.

நம்முடைய வீடுகளில் தவிர்க்க முடியாத உணவுகளாக இட்லி, தோசை உள்ளன. சில சமயங்களில் இட்லி  மீந்து போய்விடும். புளித்த இந்த இட்லி மாவில் எப்படி தோசை ஊற்றுவது என நமக்கு குழப்பம் இருக்கும். அந்த குழப்பத்தில் இருந்து விடுபடவும், புளித்த சுவையில் உள்ள மாவில் ருசியான போண்டா சுடவும் செஃப் தீனா பரிந்துரை செய்துள்ளார். 

Advertisment

மேலும், இந்த ரெசிபியை எப்படி எளியமையான முறையில் தாயார் செய்யலாம் என்பதையும் செஃப் தீனா தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். அந்த வகையில், செஃப் தீனா ஸ்டைலில் ருசியான போண்டா எப்படி தயார் செய்யலாம் என்று  இங்குப் பார்க்கலாம்.  

தேவையான பொருட்கள்:  

இட்லி மாவு - 250  கிராம் 
அரிசி மாவு - 50 முதல் 75 கிராம் 
வெங்காயம் - 1 
பச்சை மிளகாய் - 2 
இஞ்சி - 1/2 டீஸ்பூன் 
மிளகு - 1/4 டீஸ்பூன் 
சீரகம் - 1/4 டீஸ்பூன் 
கருவேப்பிலை - தேவையான அளவு 
கொத்தமல்லி தழை  - தேவையான அளவு 
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு 
எண்ணெய்  - தேவையான அளவு 

Advertisment
Advertisement

நீங்கள் செய்ய வேண்டியவை 

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் இட்லி மாவை ஊற்றவும். அதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்க்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். 

இதன் பின்னர், மிளகு, சீரகம் சேர்க்கவும். புளித்த மாவை உண்பதால் எளிதில் ஜீரணம் ஆகாது. அதனால், மிளகு, சீரகம் அவசியம் சேர்க்க வேண்டும். இதன் பிறகு, பெருங்காய தூள், அரிசி மாவு சேர்க்கவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மாவை  கையால் நன்கு கிளறிக் கொள்ளவும். 

மாவு பதம் என்பது கையில் மாவை விடும் போது கெட்டியாக கீழே இறங்க வேண்டும். பிறகு கையை கழுவி விட்டு, அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் நன்கு சூடானதும் மாவில் இருந்து போண்டா சுட்டு எடுக்கவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த இட்லி மாவு போண்டா ரெடி. 

Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment