அடுப்பு பக்கமே போக வேணாம்... வெறும் சுடு தண்ணி போதும்; வீடே மணக்கும் ரசம் ரெடி!
ரசம் வைக்க வேண்டும் என்றால் அடுப்பில் நின்று புளி கரைத்து, தாளித்து என பெரிய வேலையாக இருக்கும். ஆனால் இனி அப்படியில்லை! வெறும் 1 நிமிடத்தில், அடுப்பைப் பயன்படுத்தாமல், சூடான, மணமணக்கும் ரசத்தை செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
ரசம் வைக்க வேண்டும் என்றால் அடுப்பில் நின்று புளி கரைத்து, தாளித்து என பெரிய வேலையாக இருக்கும். ஆனால் இனி அப்படியில்லை! வெறும் 1 நிமிடத்தில், அடுப்பைப் பயன்படுத்தாமல், சூடான, மணமணக்கும் ரசத்தை செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
அடுப்பு பக்கமே போக வேணாம்... வெறும் சுடு தண்ணி போதும்; வீடே மணக்கும் ரசம் ரெடி!
ரசம் வைக்க வேண்டும் என்றால் அடுப்பில் நின்று புளி கரைத்து, தாளித்து என பெரிய வேலையாக இருக்கும். ஆனால் இனி அப்படியில்லை! வெறும் 1 நிமிடத்தில், அடுப்பைப் பயன்படுத்தாமல், சூடான, மணமணக்கும் ரசத்தை செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் பார்ப்போம். இதற்குத் தேவையெல்லாம் ஒரே ஒரு ரசப்பொடிதான்! இந்த மேஜிக் பொடியை ஒருமுறை செய்து வைத்துக்கொண்டால், அப்புறம் எப்போது ரசம் வேண்டுமானாலும் சுடு தண்ணீர் ஊற்றி அசத்தலாம்.
Advertisment
ரசப்பொடி தயாரிப்பது எப்படி?
இந்த ரசப்பொடியை தயார் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை இங்கே:
பூண்டு – 3 பெரிய கட்டி (தோலுடன் கொரகொரப்பாக அரைத்தது)
மஞ்சள் தூள் – 2 ஸ்பூன்
உப்பு – 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 2 ஸ்பூன்
செய்முறை:
ஒரு கடாயில் துவரம்பருப்பை மிதமான தீயில் சிவக்கும் வரை வறுக்கவும். அதிகம் சிவக்க விட வேண்டாம். வறுத்ததும் தட்டிற்கு மாற்றவும். அதே கடாயில் தனியாவை மனம் வரும் வரை வறுத்து, பருப்புடன் சேர்க்கவும். பிறகு சீரகம், மிளகு, வெந்தயம் சேர்த்து, சீரகம் பொரிந்து மனம் வரும் வரை வறுத்து, அதையும் மற்ற பொருட்களுடன் சேர்க்கவும். இப்போது அதே கடாயில் புளி மற்றும் வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். புளியில் உள்ள ஈரப்பதம் முழுமையாக நீங்கி, கறிவேப்பிலை மொறுமொறுப்பாகும் வரை வறுக்க வேண்டும். இதையும் மற்ற பொருட்களுடன் சேர்த்து ஆறவிடவும். அடுத்து, பூண்டினை அதே கடாயில் சேர்த்து, தண்ணீர் சத்து முழுமையாக நீங்கும் வரை வறுக்கவும். கடாயில் ஒட்டினாலும் பரவாயில்லை, தொடர்ந்து வறுத்து பூண்டை ஆறவிடவும். ஆறியதும், புளியை தனியாக எடுத்துவிட்டு, வறுத்த மற்ற பொருட்களை ஈரம் இல்லாத மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். வரமிளகாய் மட்டும் சேர்த்து முதலில் ஒருமுறை அரைக்கவும் (ரொம்ப நைசாக அரைக்க வேண்டாம். பின்னர், வறுத்த புளி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து, புளி நன்கு அரைபடும் வரை அரைக்கவும். இறுதியாக, வறுத்த பூண்டு, மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, லைட்டாக பல்ஸ் கொடுத்து அரைக்கவும். ரசப்பொடி ரொம்ப நைசாக இல்லாமல், கொஞ்சம் கொரகொரப்பாக இருக்க வேண்டும். இதுதான் ரசத்திற்கு சரியான பதம். அரைத்த ரசப்பொடியை ஒரு தட்டில் பரப்பி ஆறவிடவும்.
தாளிப்பு சேர்ப்பது எப்படி? (எண்ணெய் இல்லாமல்)
ஒரு கடாயில் கடுகு (1 டேபிள் ஸ்பூன்), சீரகம் (1 டேபிள் ஸ்பூன்), 5-6 வரமிளகாய் (பாதியாகக் கிள்ளியது), மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்க்கவும். கடுகு நன்கு பொரிந்து, கருப்பு நிறம் மாறி வெள்ளை ஆகும் வரை வறுக்கவும். வறுத்த இந்த தாளிப்பை ஆறிய ரசப்பொடியுடன் சேர்த்து நன்கு கலந்து ஆறவிடவும். நன்கு ஆறிய ரசப்பொடியை ஒரு காற்று புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும். வெளியில் ஒரு மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம். ஃபிரிட்ஜில் வைத்தால் 3 மாதம் வரை தாராளமாகப் பயன்படுத்தலாம்.
ஒரு நிமிடத்தில் இன்ஸ்டன்ட் ரசம் செய்வது எப்படி?
ஒரு கிண்ணத்தில் 2-3 டேபிள் ஸ்பூன் ரசப்பொடியை எடுத்துக் கொள்ளவும். இதில் 4 டம்ளர் நன்கு கொதித்த சுடுநீரை ஊற்றவும். ஒரு பழுத்த தக்காளியை (சிறியதாக நறுக்கியது) சேர்த்து, சிறிது கொத்தமல்லி இலைகளையும் தூவி விடவும். கிண்ணத்தை மூடி, 10 நிமிடங்கள் கழித்து திறந்தால், மணமணக்கும் சுவையான ரசம் தயார்! (தக்காளி கொதிக்கும் நீரில் நன்றாக வெந்துவிடும்).
விரும்பினால், குறைந்த அளவு எண்ணெய் விட்டு, ரசப்பொடியைச் சேர்த்து லேசாக வறுத்து, பின்னர் சுடுநீர் சேர்த்து ரசம் தயாரித்தும் சாப்பிடலாம். ஆனால், அவசரமாக ரசம் தேவைப்படும்போது, அடுப்பே இல்லாமல் இப்படி ஒரு நிமிடத்தில் ரசம் வைப்பது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும்.