நாம் எவ்வளவு உணவு வகைகளை சாப்பிட்டாலும் ஸ்வீட் சாப்பிடுவது போல் வராது. சாப்பிட அனைவருக்கும் பிடித்தாலும், ஸ்வீட் செய்வதுதான் கடும் சிக்கலே இருக்கிறது. சரியான பக்குவத்தில் செய்வது எவ்வளவு சிரமமோ அதுபோல இதற்கு அதிக நேரம் தேவைப்படும். குறிப்பாக நம்மில் பலர் ஜிலேபி என்றால் விருப்பமாக சாப்பிடுவார்கள். ஆனால் பலருக்கு ஜிலேபி செய்வது ஒரு கடனமான விஷயம் என்ற எண்ணம் இருக்கிறது. இந்நிலையில் இட்லி மாவு வைத்து விரைவில் ஜிலேபி எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
Advertisment
இட்லி மாவு அறைத்து 2 அல்லது 3 நாட்களுக்கு பிறகு மிச்சம் இருக்கும் மாவை எடுத்துகொள்ளவும். அதில் மஞ்சள் நிறம் கொடுக்கும் பொடியை சேர்த்துக்கொள்ளவும். மாவு கட்டியாக இருக்கவேண்டும். தண்ணீராக இருக்க கூடாது. தற்போது அத்துடன் மைதா மாவு சேர்க்கவேண்டும். உங்களுக்கு மைதா மாவு வேண்டாம் என்று நினைத்தால் கோதுமை மாவு அல்லது கான்பிலவர் மாவு சேர்த்துக்கொள்ளலாம். கட்டியாக இல்லாமல் மாவை கலந்துகொள்ளவும்.
Advertisment
Advertisements
அப்போதுதான் எண்ணெய்யில் பிழியும்போது சிக்கிக்கொள்ளாமல் இருக்கும். தற்போது ஏதேனும் ஒரு பிளாஸ்டிக் கவர் அலல்து கோதுமை மாவு பயன்படுத்திய பின் அதன் கவரை எடுத்து வைத்துகொள்ளவும். அதில் இந்த மாவு கலவை கொட்டவும். தற்போது கவரின் வாய்ப்பகுதியில் இருக்கமாக கட்டிவிட வேண்டும். நுனிப்பகுதியில் சிறிய ஓட்டை போடவும்.
தற்போது சக்கரை பாகு தயாரிக்க வேண்டும். 2 கப் அளவிற்கு நீங்கள் சர்க்கரை எடுத்துக்கொண்டால் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்க்கவும். ஒரு கப் அளவிற்கு சர்க்கரை எடுத்துகொண்டால் அரை கப் தண்ணீர் சேர்க்கவும். தற்போது கொதிக்கவைக்க வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்தால் சக்கரைப் பாகு ஒரு கம்பி பதம் வந்துவிடும். அடுப்பை அணைத்துவிட்டு எலிமிச்சை சாறை சேர்க்க வேண்டும். தற்போது சக்கரை பாகு தயாராகிவிட்டது. தற்போது மாவை எண்ணெய்யில் பிழிந்துவிட வேண்டும். 3 நிமிடங்கள் வரை ஜிலேபியை பெரித்து எடுக்க வேண்டும். தொடர்ந்து பெரித்த ஜிலேபியை உடனடியாக சக்கரை பாகில் சேர்க்கவும். 3 நிமிடங்களுக்கு மேல் சக்கரைப்பாகில் ஜிலேபியை வைத்திருக்ககூடாது. 3 நிமிடங்கள் கழித்து சக்கரை பாகில் இருந்து ஜிலேபியை எடுத்து சாப்பிடலாம்.