ஜில் ஜில் ஜிகர்தண்டா... மதுரை ஸ்டைலில்: கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க இப்படி செஞ்சு அசத்துங்க!
கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க சும்மா குளுகுளுனு மதுரை ஒரிஜினல் ஜில் ஜில் ஜிகர்தண்டா செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம். மதுரை ஸ்டைலில் ஜிகர்தண்டா செய்யுங்கள், வெயிலுக்கு ஜில்லுனு குடியுங்கள்.
மதுரை ஸ்டைலில் ஜிகர்தண்டா செய்வது எப்படி என்று பார்ப்போம். (Image Source: Screengrab from youtube Spicy Samayals)
கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க சும்மா குளுகுளுனு மதுரை ஒரிஜினல் ஜில் ஜில் ஜிகர்தண்டா செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம். மதுரை ஸ்டைலில் ஜிகர்தண்டா செய்யுங்கள், வெயிலுக்கு ஜில்லுனு குடியுங்கள்.
Advertisment
மதுரை ஸ்டைலில் ஜிகர்தண்டா செய்வது எப்படி என்று ஸ்பைசி சமையல்ஸ் (Spicy Samayals) என்ற யூடியூப் சேனலில் செய்துகாட்டியுள்ளனர். முதலில் கேரமில் சிரப் செய்ய வேண்டும். அதற்கு, ஸ்டவ்வைப் பற்ற வைத்து, ஒரு பாத்திரத்தில் நாட்டுச் சர்க்கரை போட்டு சூடு பண்ணினால், நாட்டுச் சர்க்கரை உருகி வரும் கிளறிவிடுங்கள். நாட்டுச் சர்க்கரை உருகியதும் ஸ்டவ்வை ஆஃப் செய்துவிட்டு, அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலந்துவிடுங்கள். கேரமில் சிரப் ரெடி. இதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது தனியாக ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி நன்றாகக் காய்ச்சியபின், அதில் கேரமில் சிரப் கொஞ்சமாக சேர்த்து கலக்குங்கள். பால் ஆடை படிகிற வரை கிண்டிக்கொண்டே இருங்கள் சுண்டி வரட்டும். நன்றாக பால் திக் ஆகி ஆடை கட்டி வரும். இப்போது இதை அப்படியே எடுத்து வைத்துவிடுங்கள்.
Advertisment
Advertisements
இப்போது இன்னொரு பாத்திரத்தில் அரை லிட்டர் பால் ஊற்றி நன்றாகக் கொதிக்க வையுங்கள். கொதித்து வரும்போது, இதிலும் 1 டேபிள்ஸ்பூன் கெரமில் சிரப் ஊற்றி நன்றாக கலந்துவிடுங்கள். சிறிது நேரம் கழித்து அதை எடுத்து ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள். நன்றாக கூல் ஆகட்டும்.
இப்போது, ஜிகர்தண்டா செய்யலாம், ஒரு பெரிய கிளாஸ் எடுத்துக்கொள்ளுங்கள், அதில், ஊறவைத்த பாதாம் பிசின் 1 டேபிள்ஸ்பூன் போடுங்கள். 1 டேபிள்ஸ்பூன் நன்னாரி சிரப் சேர்த்துக்கொள்ளுங்கள். இதற்கு மேல், கேரமில் சேர்த்து சுண்டக் காய்ச்சிய பாலாடையை 1 டேபிள்ஸ்பூன் போடுங்கள். அதற்கு மேல் நாம் காய்ச்சி ஃபிரிட்ஜில் வைத்துள்ள பாலை சேர்த்துக்கொள்ளலாம். அதற்கு மேல் ஐஸ்கிரீம் சேர்த்துக்கொள்ளலாம். அதற்கு மேல் கேரமில் சிரப் சேர்த்து சாப்பிட்டால் ஜில் ஜில் ஜிகர்தண்டா கொளுத்தும் வெயிலுக்கு இதமாக இருக்கும்.