தென் இந்தியாவின் ஏதென்ஸ் என்று அழைக்கப்படும் மதுரை, பாரம்பரிய கலாச்சார நகரமாக திகழ்கிறது. அதே நேரத்தில், மதுரை வகை வகையான உணவுகளுக்கும் விதவிதமான சுவையான உணவுகளுக்கும் பெயர் பெற்றது.
மதுரையில் ஒரு பேமஸ் கார சட்னி செய்கிறார்கள். அதே ஸ்டைலில் உங்கள் வீட்டில் மதுரை கார சட்னி செய்யுங்கள்.
மதுரை கார சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம்
பெரிய தக்காளி 3
பூண்டு 8 பல்லு
காய்ந்த மிளகாய் 4
காஷ்மீரி மிளகாய் 3
புளி சிறிது அளவு
வெல்லம் 2 துண்டு
உப்பு கொஞ்சம்
செய்முறை:
மேலே கூறிய அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது ஸ்டவ்வைப் பற்ற வையுங்கள், ஒரு பான் எடுத்து வையுங்கள், அதில் சிறிது அளவு நல்லெண்ணெய் ஊற்றுங்கள். 1 டீஸ்புன் உளுந்து, அரை டீஸ்பூன் கடுகு போட்டு பொரிய விடுங்கள். அரை டீஸ்பூன் சீரகம், கொஞ்சம் கருவேப்பிலை, 3 சிட்டிகை பெருங்காயம் போடுங்கள். அடுத்து, அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து நன்றாகக் கலக்கிவிடுங்கள். இப்போது அதை மூடி வைத்து சிறிது நேரம் கழித்து எடுத்தால் மதுரைக் காரச் சட்னி தயார். உங்கள் வீட்டில் செய்து பாருங்கள், எப்படி இருக்கிறது கூறுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“