இந்த முறுக்கு சுட அச்சு வேணாம்; பிளாஸ்டிக் கவர் போதும்... மொறு மொறு ஈவினிங் ஸ்நாக்ஸ் இப்படி ரெடி பண்ணுங்க!
இந்த முறுக்கு சுட அச்சு வேண்டாம், பிளாஸ்டிக் கவர் போதும். மொறு மொறு ஈவினிங் ஸ்நாக்ஸ் இப்படி ரெடி பண்ணுங்க. இந்த முறுக்கை சுடுவது எப்படி என்று இங்கே பார்ப்போம்.
முறுக்கு அச்சு இல்லாமல் இந்த குட்டி முறுக்கு சுடுவது எப்படி என்று இங்கே பார்ப்போம்.
இந்த முறுக்கு சுட அச்சு வேண்டாம், பிளாஸ்டிக் கவர் போதும். மொறு மொறு ஈவினிங் ஸ்நாக்ஸ் இப்படி ரெடி பண்ணுங்க. இந்த முறுக்கு சுடுவது எப்படி என்று இங்கே பார்ப்போம்.
Advertisment
பெட்டிக் கடைகளில் கிடைக்கும் குட்டி முறுக்கு சாப்பிட நன்றாக இருக்கும். எனக்கு பிடித்த சமையல் யூடியூப் சேனலில் செய்து காட்டப்பட்டுள்ள, முறுக்கு அச்சு இல்லாமல் இந்த குட்டி முறுக்கு சுடுவது எப்படி என்று இங்கே பார்ப்போம்.
முதலில் அரை கப் அளவு பொட்டுக்கடலை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பவுடர் மாதிரி அரைத்து சலித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
Advertisment
Advertisements
அதே கப்பில் ஒரு கப் அளவு அரிசி மாவு எடுத்து நன்றாக அரைத்து, சலித்து அந்த அரிசி மாவை சேர்த்துக்கொள்ளுங்கள். இதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள், அடுத்து கொஞ்சமாக பெருங்காயத்தூள் சேர்த்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு காரம் வேண்டும் என்றால், கொஞ்சமாக மிளகாய்தூள் கூட சேர்த்துக்கொள்ளலாம். அடுத்து, இதனுடன் கொஞ்சமாக சூடான சமையல் எண்ணெய் சேர்த்து, கலந்துவிடுங்கள். அடுத்து, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு தயார் செய்வோம் இல்லையா அந்த மாதிரி, அதைவிட கொஞ்சம் சாஃப்ட்டாக மாவு தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
வீட்டில் முறுக்கு அச்சு இருந்தாலும் கூட, இதற்கு முறுக்கு அச்சு வேண்டாம். பெட்டிக் கடைகளில் கிடைக்கும் ஒரு ரூபாய் குட்டி முறுக்கு செய்வதற்கு, இப்போது நமக்கு ஒரு கவர் எடுத்துக்கொள்ளுங்கள். அந்த கவரில் மாவை நிரப்பி, மூலையில் சிறியதாக ஓட்டை போட்டு, அதன் வழியாக குட்டி குட்டியாக முறுக்கு சுற்றி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் முறுக்கு தயார். உங்கள் வீட்டில் மொறு மொறு ஈவினிங் ஸ்நாக்ஸை இப்படி செய்து பாருங்கள்.