மதுரை பேமஸ் பன் பட்டர்... வெறும் 10 நிமிசம் போதும்; தரமான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி
மதுரையில் இனிப்பு மற்றும் வெண்ணெய் சுவையின் சுவாரஸ்யமான கலவையில் செய்யப்படும் பன் பட்டர் டோஸ்ட் மிகவும் பிரபலமான சிற்றுண்டிகளில் ஒன்றாகும். மதுரை ஸ்பெஷல் பன் பட்டர் டோஸ்ட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
மதுரையில் இனிப்பு மற்றும் வெண்ணெய் சுவையின் சுவாரஸ்யமான கலவையில் செய்யப்படும் பன் பட்டர் டோஸ்ட் மிகவும் பிரபலமான சிற்றுண்டிகளில் ஒன்றாகும். மதுரை ஸ்பெஷல் பன் பட்டர் டோஸ்ட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
10 நிமிடங்களில் செய்யலாம் மதுரை ஸ்பெஷல் பன் பட்டர் டோஸ்ட்
மதுரை மல்லி மட்டும் பேமஸ் இல்ல, விதவிதமான உணவுகளுக்கும்தான். மதுரை ஸ்பெஷல் உணவுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். மதுரையில் இனிப்பு மற்றும் வெண்ணெய் சுவையின் சுவாரஸ்யமான கலவையில் செய்யப்படும் பன் பட்டர் டோஸ்ட் மிகவும் பிரபலமான சிற்றுண்டிகளில் ஒன்றாகும்.
Advertisment
நீங்கள் இதை முதல் கடி கடித்தவுடன் உங்கள் வாயில் உருகும் இனிப்பும், வெண்ணெயின் சுவையும் மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும். இதில், மற்றொரு சிறப்பு என்னவென்றால் 10 நிமிடங்களுக்குள் இதை தயார் செய்து விடலாம். இதை சூடான காபி அல்லது டீயுடன் சாப்பிட சூப்பராக இருக்கும். அதுமட்டுமின்றி மாலையில் பள்ளியில் இருந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு இந்த செய்து கொடுத்தால திரும்ப திரும்ப கேப்பாங்க. வாங்க மதுரை ஸ்பெஷல் பன் பட்டர் டோஸ்ட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஃபிரஷான பன் - 1
Advertisment
Advertisements
காய்ச்சி ஆற வைத்த பால் - 2 கப்
சர்க்கரை - விருப்பத்திற்கேற்ப
வெண்ணெய் - விருப்பத்திற்கேற்ப
செய்முறை :
பன்னை இரண்டாக வெட்டிக்கொள்ளவும். வெட்டிய பன்னின் ஒரு பகுதியில் வெண்ணெய் தடவி அதன் மேல் சர்க்கரையை உங்கள் விருப்பம் போல் தூவி கொள்ளவும். அதேபோல் மற்றொரு பாதியிலும் வெண்ணெய் தடவி நாட்டு சர்க்கரையை தூவி இரண்ரையும் ஓன்றாக மூடவும். மூடிய பன் மேல் மறுபடியும் வெண்ணெய் தடவி சர்க்கரையை தூவவேண்டும்.
இப்போது ஒரு ஃப்ரையிங் பேனை அடுப்பில் வைத்து சிறிது வெண்ணெய் போட்டு உருகியதும் அதில் பன்னை வைத்து சுற்றி அரை கப் பால் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலில் பன் வேகும் படி சுற்றி விடவும். பன் மிருதுவாக மாறி, பால் வற்றியதும் எடுத்து சுடச்சுட தட்டில் வைத்து அதன் மேல் சிறிது வெண்ணெய், சர்க்கரை தூவி பரிமாறவும். டேஸ்டான மதுரை பன் பட்டர் டோஸ்ட் ரெடி..!