தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி - 3 கரண்டி
மிளகு - ஒன்றரை கரண்டி
சீரகம் -1 கரண்டி
ஓமம் -1 கரண்டி
வெந்தயம் -1 கரண்டி
கடுகு -1 கரண்டி
உளுத்தம் பருப்பு -1 கரண்டி
சுக்கு -சிறிது
மஞ்சள் கோம்பு -சிறிது
காய்ந்த மிளகாய் -3
எண்ணெய்
பூண்டு
சின்ன வெங்காயம்
கருவேப்பிலை
பெருங்காயம்
செய்முறை
ஒரு கடாயில் மேற்குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் வறுத்து எடுத்து கொள்ளவும். இதில் கருவேப்பிலையை மட்டும் தனியாக வறுக்கவும். பின்னர் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் மைய பொடி மாதிரி அரைக்கவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகு, பூண்டு, வெங்காயம் வதக்கி அதனுடன் இந்த அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் புளிகரைசல் சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேக வைத்து ஒரு கொதி விட்டு இறக்கவும். இதனுடன் சிறிது கருப்பட்டி சேர்க்கலாம்.
மழைக்கு ஏற்ற மருந்து குழம்பு! சளி இருமல் மூச்சு திணறல் ஆகியவற்றிற்கு மிகச்சிறந்த மருந்தான உணவு!
இதனை சுடு சோறுடன் சேர்த்து சாப்பிட்டால் சளி பிரச்சனை தீரும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“