ரேஷன் அரியில் இட்லி செய்யலாம், வேறு என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்காகத்தான் ஒரு கப் ரேஷன் அரசியில் சுவையான பப்படம் செய்வது என்று இங்கே பார்க்கலாம். பப்படம் செய்து முடிக்கும்போது, இதை இவ்வளவு நாள் யோசிக்கலையே என்று நீங்களே வியந்துபோவீர்கள்.
ரேஷன் அரிசியில் பப்படம் செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம். உங்கள் வீட்டில் ரேஷன் அரிசியில் பப்படம் செய்வது ரொம்ப ஈஸி.
ரேஷன் அரிசியில் பப்படம் செய்யும் முறை
ரேஷன் அரிசி பச்சரிசி 1 கப் எடுத்துக் கொள்ளுங்கள். 3 அல்லது 4 முறை நன்றாகக் கழுவி ஊற வையுங்கள். 3 மணி நேரத்துக்குப்பின், அரிசி ஊறிய பிறகு, நன்றாகக் கழுவிக்கொள்ளுங்கள். அரிசியை அழுத்தினால் மசியும் அளவுக்கு இருக்க வேண்டும்.
இப்போது, அரிசியில் இருந்து தண்ணீரை வடித்துவிட்டு அரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, அரிசிக்கு கீழே கொஞ்சம் தண்ணீர் இருக்கும் விதமாக அரசியில் தண்ணீர் சேர்த்துவிட்டு, உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு நைசாக மாவை அரைத்துக்கொள்ளுங்கள். நன்றாக நைசாக மாவு அரைத்த பிறகு, மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது மாவில் தேவையான அளவு உப்பு, 1 டேபிள் ஸ்பூன் சீரகஇடித்த காய்ந்த மிளகாய் பொடி 1 டேபிள்ஸ்பூன், கால் ஸ்பூன் அளவு பெருங்காயம் சேர்த்து நன்றாக கலக்குங்கள். மாவு நீராக இருக்க வேண்டும். அதாவது மாவைக் கரண்டியால் நன்றாகக் கலக்கிவிட்டு கரண்டியைத் திருப்பி அதன் பின் புறத்தில் உங்கள் விரலால் ஒரு கோடு போட்டீர்கள் என்றால் அந்த கோடு தெளிவாகத் தெரிய வேண்டும். இதுதான் மாவு பக்குவம்.
அடுத்து, ஒரு சிறிய குண்டானை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி ஒரு காட்டன் துணியில் அதன் வாய்புறத்தை ஒரு துணியால் கட்டி விடுங்கள். துணி கட்டிய பிறகு, அது ஒரு பான் போல இருக்க வேண்டும். இதை குண்டானை ஸ்டவ்வில் வைத்து பற்ற வையுங்கள். இப்போது மாவை நன்றாகக் கலக்கில் அதில் தோசை போல ஊற்றுங்கள். ஒரு பாத்திரத்தை எடுத்து மூடிவிடுங்கள். வெந்த பிறகு, அதை கிழியாமல் எடுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இப்படி ஒவ்வொன்றாக ஊற்றி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
இதை வேறு ஒரு முறையிலும் செய்யலாம், ஒரு சிறிய வட்டமான தட்டு எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நன்றாக சமையல் எண்ணெய் தடவிவிட்டு மாவை குட்டி தோசை போல ஊற்றி, ஒரு இட்லி குண்டானில் தண்ணீர் உற்றி, காலி தட்டை மூடி அதன் மீது இந்த தட்டை வைத்து மூடிவிடுங்கள். வெந்த பிறகு, வெளியே எடுத்து ஆறிய பிறகு, கிழியாமல் எடுங்கள்.
இப்படி, ஏதாவது ஒரு முறையில் நிறைய சுட்டு வைத்துக்கொள்ளுங்கள். அதை வெயிலில் காய வையுங்கள். நன்றாக சருகு போல காய்ந்ததும் அதை சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள். இப்போது ஸ்டவ்வை பற்ற வைத்து ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பப்படத்துக்கு தயார் செய்து வைத்துள்ளதை எண்ணெயில் போட்டு பொரித்தால் சுவையான பப்படம் தயார்.
ரேஷன் அரிசியில் இப்படி சுவையான பப்படம் செய்யலாம் என்பதை இதுவரை யோசிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இப்போது ரேஷன் அரிசியில் பப்படம் செய்து பாருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.