நடிகர் துல்கர் சல்மான் விரும்பும் பத்திரி... கேரளா ஸ்டைலில் இப்படி ரெடி பண்ணுங்க!
ஒரு நேர்காணலில் உங்களுக்குப் பிடித்த மலையாளி உணவு எது என்ற கேள்விக்கு நடிகர் துல்கர் சல்மான் தனக்கு பிடித்த உணவு பத்திரி என்று கூறுகிறார். பத்திரி என்றால் என்ன கேரளா ஸ்டைலில் இப்படி செய்து பாருங்கள்.
நடிகர் துல்கர் சல்மானுக்கு பிடித்த இந்த பத்திரி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
ஒரு நேர்காணலில் உங்களுக்குப் பிடித்த மலையாளி உணவு எது என்ற கேள்விக்கு நடிகர் துல்கர் சல்மான் தனக்கு பிடித்த உணவு பத்திரி என்று கூறுகிறார். பத்திரி என்றால் என்ன கேரளா ஸ்டைலில் இப்படி செய்து பாருங்கள்.
Advertisment
பத்திரி என்பது வேறு ஒன்றுமில்லை அது அரிசி மாவு சப்பாத்தி போன்றது. தேங்காய் பால் உடன், மட்டன், சிக்கன் உடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும். நடிகர் துல்கர் சல்மானுக்கு பிடித்த இந்த பத்திரி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
பத்திரி செய்முறை:
Advertisment
Advertisements
பதிரி எப்படி செய்வது என்று சாய்னஸ் டைரி யூடியூப் சேனலில் செய்து காட்டியுள்ளனர். முதலில், 2 கப் அளவு அரிசி மாவுக்கு 3 1/2 கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு, கொதிக்க வைத்து நன்றாகக் கிளறிவிட வேண்டும். சூடு ஆறியதும் சப்பாத்திக்கு மாவு பிசைவது போல பிசைந்து, சப்பாத்தி போல தேய்க்க வேண்டும். அதை தவாவில் சப்பாத்தி போல சுட்டு எடுத்தால், பத்திரி தயார்.
பத்திரியை தேங்காய் பாலில் நனைத்து, இதற்கு முட்டை குழம்பு, சிக்கன், மட்டன் ஏதாவது ஒன்றை சைட் டிஷ் ஆக சாப்பிட்டால் கணக்கில்லாமல் பத்திரி சாப்பிடுவீர்கள்.