எப்போதுமே பூரி சுடுறதுக்கு நிறைய எண்ணெய் தேவைப்படுகிறது, அப்படின்னு நிறைய பேர் பூரி செய்யாமலேயே இருப்பாங்க. அதுமட்டும் இல்லாமல் பூரி சுட்டு எடுத்த பிறகும் அதிக எண்ணெய் பூரி மேல இருக்கு. சாப்பிட்ட பிறகு வாந்திஉ வருவது போல் இருக்கு என்கிறவர்கள் எல்லாம் ஒருமுறை இந்த மாதிரி பூரி செய்து பார்க்கலாம்.
பூரிக்கு மாவு பிசையும் போது கோதுமைமாவுல சர்க்கரை, உப்பு,நெய்,மிக்ஸியி அரைத்த வாழைப்பழம் எல்லாம் சேர்த்து சுடுதண்ணீரில் மாவு பிசைந்தா நல்லா சாஃப்டா மாவு ரெடியாகிவிடும்.
இந்த பூரி என்ன குடிக்காம ரொம்ப சாஃப்டா, புசுபுசுன்னு வர்றதுக்கு தான் இந்த முறை. அடிப்பக்கம் சமதளமா இருக்க ஒரு கடாயில கொஞ்சமா எண்ணெய் ஊத்தி எண்ணெய் நல்லா காஞ்சதுக்கு அப்புறம் இந்த பூரி மாவை அதுல போட்டு இரண்டு பக்கமும் திருப்பி வேகவைத்து எடுத்துக்கனும்.
அதிக எண்ணெய் ஊத்தி எண்ணெய்லையே வறுத்து எடுத்ததாதான் பூரி புஸ்ஸுன்னு வரும் என்று இனி பயப்பட தேவை இல்லை. தோசைக்கல்லில் மீன் வறுக்க எவ்வளவு எண்ணெய் தேவைப்படுகிறதோ, அந்த எண்ணெயே போதும் பூரி புஸ்ஸுன்னு சுட்டு எடுக்க.
இனிமே பூரி செய்யணும்னா அதிக என்ன தேவைப்படும் அப்படின்ற கவலையே வேண்டாம். இந்த முறையில் பூரி செஞ்சு பாருங்க நிறைய எண்ணெயும் குடிக்காது. அதே மாதிரி சாப்பிடும்போது வாந்திவரும் உணர்வும் இருக்காது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“