சப்பாத்தி நன்றாக உப்பி வர வேண்டும் என்றால் சில வழிமுறைகளை நாம் கடைபிடிக்க வேண்டும். இந்நிலையில் இதை எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்வோம்.
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் 3 கப் அளவு கோதுமை மாவை எடுத்துக்கொள்ளவும். வீட்டில் அரைத்ததாக இருந்தாலும் சரி கடையில் வாங்கியதாக இருந்தாலும் அதை பயன்படுத்தலாம். ஒரு கப் மாவுக்கு அரைக்கப் தண்ணீர் எடுத்துகொள்ள வேண்டும். 3 கப் மாவுக்கு 1 ½ கப் அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். மாவு பிசையும்போது, கையை நன்றாக தண்ணிரில் முக்கி எடுத்துக்கொண்ட பிறகு பிசைய வேண்டும். தொடர்ந்து சமமான மேல்பரப்பில் மாவை வைத்து நன்றாக பிசைய வேண்டும். கிட்டதட்ட 2 நிமிடங்கள் வரை, நன்றாக அழுத்தம் கொடுத்து மாவை பிசைய வேண்டும். மாவை நீட்டமாக ரோல் செய்யவும். தற்போது சமமான அளவில் உருண்டை பிடித்துக்கொள்ளுங்கள்.
தொடர்ந்து சப்பாத்தியை நன்றாக வட்டமாக இட்டுக்கொள்ளவும். முதலில் நீளவாக்கில் தேய்க்க வேண்டும். தொடர்ந்து வட்டமாக தேய்க்க வேண்டும். சப்பாத்தி எப்போதும் சுடும்போதும், அதிக தீயில்தான் அடுப்பு இருக்க வேண்டும். தாவாவில் சாப்பாதியை போட வேண்டும். ஒரு பக்கம் வெந்ததும், சிறிய சிறிய குமிழிகள் வரும். அப்போது மறுபுறம் சப்பாத்தியை திருப்பி போட வேண்டும். இதுபோன்று தொடர்ந்து செய்யவும். வேண்டும் என்றால் எண்ணெய் ஊற்றிக்கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil