இட்லி மாவு இருக்கா? ஈஸியா ரிப்பன் பக்கோடா இப்படி செய்யுங்க!

டேஸ்டியான ரிப்பன் பக்கோடா; இட்லி மாவில் ஈஸியா வீட்டிலேயே செய்யலாம்; ரெசிபி இதோ…

டேஸ்டியான ரிப்பன் பக்கோடா; இட்லி மாவில் ஈஸியா வீட்டிலேயே செய்யலாம்; ரெசிபி இதோ…

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இட்லி மாவு இருக்கா? ஈஸியா ரிப்பன் பக்கோடா இப்படி செய்யுங்க!

How to make Ribbon Pakoda with Idli batter easy recipe in Tamil: காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளை தவிர பிற நேரங்களில் பசி எடுத்தால் நாம் தேடுவது ஸ்நாக்ஸ் ஐட்டங்களைத் தான். அதுவும் மாலை நேர ஸ்நாக்ஸ் என்பது பெரும்பாலானோர்க்கு தவிர்க்க முடியாததாகி விட்டது.

Advertisment

இந்த ஸ்நாக்ஸ் ஐட்டங்களில், தற்போது பல்வேறு வகைகள் வந்து விட்டாலும், அனைவருக்கும் பிடித்தது, மொறுமொறுவென்று, சற்று காரமாக இருக்கும் ஸ்நாக்ஸ்களைத் தான். இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பது, மிக்சர், காரசேவ், பக்கோடா போன்றவை தான். இவற்றின் தனித்துவமான ருசிக்காகவே இதனை எல்லோரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

இதையும் படியுங்கள்: சுகர் பிரச்னை தீர 25 முதல் 100 கிராம் வெந்தயம்: இப்படி பயன்படுத்திப் பாருங்க!

இவற்றில் ரிப்பன் பக்கோடா பெரும்பாலானோருக்கு பேவரைட் ஸ்நாக்ஸ். ஆனால் இந்த ரிப்பன் பக்கோடாவை நீங்கள் இனி கடைகளில் வாங்க வேண்டியதில்லை. வீட்டில் இருக்கும் இட்லி மாவைக் கொண்டே எளிமையாக இந்த ரிப்பன் பக்கோடாவைச் செய்யலாம். செலவு குறைவு. டேஸ்ட் அதிகம். இட்லி மாவைக் கொண்டே, இந்த சுவையான ரிப்பன் பக்கோடாவை எப்படி செய்வது என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

Advertisment
Advertisements

தேவையான பொருட்கள்

கெட்டியான இட்லி மாவு - 1 கப்

பொட்டுக்கடலை - 1 கப்

வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை

தண்ணீர் ஊற்றாத கெட்டியான இட்லி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக, பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.

அரைத்த பொட்டுக்கடலை மாவை இட்லி மாவில் சேர்த்து நன்கு பிசைந்து கெட்டியான பதத்திற்கு கொண்டு வர வேண்டும்.

இதனுடன் தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். இப்போது அதில் வெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். அவ்வளவுதான் மாவு ரெடி.

அடுத்ததாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்றாக காய வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர், முறுக்கு அச்சு எடுத்து அதில் ரிப்பன் பக்கோடா அச்சு வைத்து ஒரு உருண்டை மாவை அதில் வைத்து காய்ந்த எண்ணெயில் பிழிந்துவிடுங்கள்.

அவை பொன்னிறமாக வெந்து வந்ததும் லாவகமாக எடுத்து கிண்ணத்தில் போடுங்கள். அவ்வளவுதான் ரிப்பன் பக்கோடா தயார்.

இந்த சுவையான ரிப்பன் பக்கோடாவை, நீங்களே உங்கள் செய்து சாப்பிடுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: