ஒரு ஸ்பூன் அரிசி மாவுடன் சூப்பரான சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும் ரகசியத்தை பிரலபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் கூறுகிறார். எப்படி செய்வது என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
சேப்பங்கிழங்கு செய்யும்போது பலரும் வழவழ என்று செய்துவிடுவார்கள். அது சிலருக்கு சாப்பிட பிடிக்காமல் போய்விடும். அதனால், ஒரு ஸ்பூன் அரிசி மாவுடன் சூப்பரான சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும் ரகசியத்தை பிரலபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் கூறுகிறார். எப்படி செய்வது என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
சேப்பங்கிழங்கு ரோஸ்ட்
செய்முறை: சேப்பங்கிழங்கை நன்றாகக் கழுவிய பிறகு, குக்கரில் போட்டு, அதனுடன் கொஞ்சம் மஞ்சள் தூள், உப்பு போட்டு 5-6 விசில் வரும் வரை வேக வையுங்கள். அதன் பிறகு, சூடு ஆறிய பிறகு, சேப்பங்கிழங்கு தோலை உரித்து கிழங்கை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது அந்த சேப்பங் கிழங்கை அரை அங்குலம் அளவுக்கு வட்டம் வட்டமாக வெட்டி வைத்துக்கொள்ளுங்கள். இந்த அளவு ரொம்ப கனமகாவும் இருக்கக் கூடாது. ரொம்ப மெல்லியதாகவும் இருக்கக் கூடாது.
இப்போது அடுப்பு பற்ற வையுங்கள், ஒரு வானலியை எடுத்து வித்துக்கொள்ளுங்கள். 2 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய்யை ஊற்றி சூடுபடுத்துங்கள். அதில், 2-3 காய்ந்த மிளகாய் போடுங்கள். அதனுடன் 1 டீஸ்பூன் கடுகு போடுங்கள். கடுகு பொரிந்ததும் அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு போடுங்கள். ஒரு கொத்து கறிவேப்பிலை போடுங்கள். இதில், வேகவைத்து, தோல் உரித்து வெட்டி வைத்திருக்கிற சேப்பங்கிழங்கை போடுங்கள்.
சேப்பங்கிழங்கு நன்றாக வேகவேண்டும் என்பதால் பிரித்துவிடுங்கள். இந்த சேப்பங்கிழங்கை 10 நிமிடம் நன்றாக வறுத்துக்கொள்ளுங்கள். ரோஸ்ட் ஆன 2 நிமிடத்தில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் போடுங்கள். ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள் போடுங்கள். அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் போடுங்கள். இப்போது நன்றாக கிளறிவிடுங்கள். ஸ்டவ்வில் தீயை சிம்ல வைத்துக்கொண்டு, பெருங்காயத்தூள், மிளகாய் தூள் வாசனை போகும் வரை ரோஸ்ட் செய்ய வேண்டும். பொறுமையாக ரோஸ்ட் செய்ய வேண்டும். இந்த மசாலா உடன் சேப்பங்கிழங்கில் ஒரு லேயர் செய்வதற்கு அரை ஸ்பூன் அரிசி மாவு தூவி விடுங்கள். 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, அரிசி மாவும் நெய்யும் நன்றாகக் கலக்கும் விதமாக டாஸ் செய்து கிளறிவிடுங்கள். இப்போது தேவையான அளவு உப்பு போடுங்கள். ஸ்டவ்வில் தீயை அதே சிம்ல வைத்து மிகவும் பொறுமையாக சேப்பங்கிழங்கை வறுக்க வேண்டும். கடைசியாக சிறிது கறிவேப்பிலை போட்டு இறக்கி வைத்தால் சூவையான மொறுமொறுவென்ற சேப்பங்கிழங்கு ரோஸ்ட் தயார். இந்த சேப்பங்கிழங்கு ரோஸ்ட் நல்ல சைட் டிஷ்ஷாக இருக்கும். உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.