Advertisment

மாவு பிசையும் போது 2 ஸ்பூன்... உங்க வீட்டுல சாஃப்ட் சப்பாத்தி இப்படி பண்ணுங்க!

பொதுவாக நாம் சப்பாத்தி தாயார் செய்யும் போது, அவை சாஃப்டாக வர வேண்டும் என எதிர்பார்ப்பது உண்டு. ஆனால் சில சமயங்களில் அவை நாம் எதிர்பார்த்தது போல சாஃப்டாக வருவதில்லை.

author-image
WebDesk
New Update
how to make soft chapati  and soft chapati recipe tips in tamil

சாஃப்ட் சப்பாத்தி தயார் செய்ய சிம்பிள் டிப்ஸ் பாருங்க

இன்று பலராலும் விரும்பப்படும் பொதுவான உணவுகளில் ஒன்றாக 'சப்பாத்தி' இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இந்த அற்புத உணவில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளடங்கி இருக்கிறது. மேலும், உடல் நலன் சார்ந்த பல பிரச்னைகளின் போதும் பரிந்துரைக்கப்படும் ஒரு உணவாகவும் இவை உள்ளன.

Advertisment

பொதுவாக நாம் சப்பாத்தி தாயார் செய்யும் போது, அவை சாஃப்டாக வர வேண்டும் என எதிர்பார்ப்பது உண்டு. ஆனால் சில சமயங்களில் அவை நாம் எதிர்பார்த்தது போல சாஃப்டாக வருவதில்லை. அவை அப்படி சாஃப்டாக வர சமையல் செயல்முறை சரியாக இருக்க வேண்டும். அந்த வகையில், சாஃப்ட் சப்பாத்தி எப்படி தயார் செய்வது என்று இங்குப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 

கோதுமை மாவு - 3 கப் 
உப்பு - 2 1/2 டேபிள் ஸ்பூன் 
எண்ணெய் அல்லது நெய் - 2 டேபிள் ஸ்பூன் 
தண்ணீர் - 2 கப் 

நீங்கள் செய்ய வேண்டியவை: 

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் கோதுமை மாவு சேர்க்கவும். அதில், எண்ணெய் அல்லது நெய் விட்டு கலந்து கொள்ளவும். பிறகு, தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மாவை பிசையவும். 

மாவு கையில் ஒட்டாத அளவுக்கு பிசையவும். பிசைந்த மாவு அப்படியே தனியாக ஒரு பாத்திரம் கொண்டு சுமார் 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து விடவும். 

நன்கு ஊறி வந்த மாவில், வழக்கம் போல் சப்பாத்திகளை தேய்க்க ஆரம்பிக்கவும். பிறகு சூடான தோசைக் கல்லில் தேய்த்த சப்பாத்தி மாவுகளை போட்டு எடுத்தால், சூடான மற்றும் சாஃப்ட் சப்பாத்தி ரெடி. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment