எண்ணெய் சேர்த்து மாவு பிசைய வேண்டாம்: சாஃப்ட் சப்பாத்திக்கு அனிதா குப்புசாமி ரெசிபி
எண்ணெய் சேர்த்து மாவு பிசையாமல் சாஃப்ட் சப்பாத்தி செய்வது எப்படி என்று பிரபல நாட்டுப்புற இசை பாடகி அனிதா குப்புசாமி ஒரு எளிமையான டிப்ஸ் உடன் கூறியுள்ளார்.
எண்ணெய் சேர்க்காமல் எப்படி சாஃப்ட் செய்வது எப்படி என்று அனிதா குப்புசாமி கூறுவதை இங்கே பார்ப்போம்.
எண்ணெய் சேர்த்து மாவு பிசையாமல் சாஃப்ட் சப்பாத்தி செய்வது எப்படி என்று பிரபல நாட்டுப்புற இசை பாடகி அனிதா குப்புசாமி ஒரு எளிமையான டிப்ஸ் உடன் கூறியுள்ளார்.
Advertisment
எண்ணெய் சேர்க்காமல் எப்படி சாஃப்ட் செய்வது எப்படி என்று அனிதா குப்புசாமி கூறுவதை இங்கே பார்ப்போம்.
சாஃப்ட் சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு 5 கப்
Advertisment
Advertisement
உப்பு தேவையான அளவு
தண்ணீர் தேவையான அளவு
நெய் அல்லது சமையல் எண்ணெய் தேவையான அளவு
சாஃப்ட் சப்பாத்தி செய்முறை:
சப்பாத்தி உருட்டுவதற்கு சிறிது அளவு மாவு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது தேவையான அளவு தண்ணீரும் உப்பும் சேர்த்து கோதுமை மாவை கெட்டியாகவும் இல்லாமல் தண்ணீராகவும் இல்லாமல் பிசைந்துகொள்ள வேண்டும். மாவு பிசையும்போது எண்னெய், நெய் எதுவுமே சேர்க்க வேண்டாம். மாவை நன்றாகப் பிசையுங்கள். பிசைந்து வைத்த மாவு 10 நிமிடம் ஊற வேண்டும்.
பிசைந்து வைத்த கோதுமை மாவு ஊறிய பிறகு எடுத்து விரலை வைத்து அழுத்திப் பார்த்தால் அதில் விரல் பதிய வேண்டும், இந்த பக்குவத்தில் மாவு இருக்க வேண்டும். இப்போது இந்த மாவை இன்னொரு முறை நன்றாகப் பிசைந்து சாஃப்ட் ஆக்க வேண்டும். நன்றாக பிசைந்த பிறகு, காய்ந்த மாவைத் தொட்டு தொட்டு உருண்டையாக்கிக் கொள்ளுங்கள்.
இப்போது நன்றாக உருண்டை உருட்டிக் கொள்ளுங்கள், இப்போது லேசாக மாவு தொட்டு சப்பாத்தி உருண்டையை லேசாக தேயுங்கள். அடுத்து, நெய் அல்லது சமையல் எண்னெய்யை அதில் தடவுங்கள், இப்போது அதை புடவை மடிப்பு சுற்றுவது போல, சுருட்டி, மறுபுறம் நன்றாக உருண்டையாக இருக்கும் படி சுருட்டி வையுங்கள். இப்படி எல்லா உருண்டைகளையும் சுருட்டி வையுங்கள். இப்போது தவாவை அடுப்பில் வைத்து காய வையுங்கள். அடுத்து, அந்த உருண்டைகளை சப்பாத்தி மாவு லேசாகத் தொட்டு வட்டமாக தேயுங்கள், சிறியதாகவும் இல்லாமல் பெரியதாகவும் இல்லாமல் மிதமான அளவில் தேயுங்கள். இப்போது, அதை எடுத்து தவாவில் போடுங்கள், லேசாக பபுள்ஸ் வந்ததும் திருப்பி போட்டு நெய் அல்லது சமையல் எண்ணெய்யை தடவுங்கள், மீண்டும் திருப்பி போட்டு தடவுங்கள் லேசாக பிரவுன் வந்ததும் எடுத்துவிடுங்கள். நீண்ட நேரம் வேக வைத்தால் கருப்பு நிறமாக மொடமொடவென இருக்கும். அதனால், பக்குவமாக சப்பாத்தி சுடுங்கள், நன்றாக சாஃப்ட்டாக இருக்கும்.