பிரபல சமையல் கலைஞர் கண்ணன் வீட்டிலெயே சாஃப்ட் புரோட்டா செய்ய மாவு பிசையும்போது 1 கிளாஸ் பால் சேர்த்து செய்தால் புரோட்டா சாஃப்ட்டாக, பஃபியாக வரும் என்று புரோட்டா செய்து காட்டியுள்ளார்.
புரோட்ட சேய்ய தேவையான பொருட்கள்:
மைதா மாவு 1 கிலோ
முட்டை 1
பால் 100 மி.லி
சர்க்கரை 1 டீஸ்பூன்
உப்பு 1 டீஸ்பூன்
தண்ணீர் 600 மி.லி
சூரியகாந்தி எண்ணெய் 1/2 லிட்டர்
செய்முறை:
புரோட்டாவுக்கு மாவு பிசையும்போது முதலில் தண்ணீரை கொஞ்சமாக ஊற்றிக்கொள்ளுங்கள். மாவு பிசைவதற்கு ஒரு பெரிய அகலமான பேசின் பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். 600 மி.லி தண்ணீரில், 500 மி.லி தண்ணீரை மட்டும் ஊற்றுங்கள். தண்ணீர் போதவில்லை என்றால் கையில் எடுத்து தெளித்துக்கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்றியதும், 1 டீஸ்பூன் தூள் உப்பு போடுங்கள். 1 ஸ்பூன் சர்க்கரை போடுங்கள். பால் 100 மி.லி ஊற்றுங்கள். பால் ஊற்றுவதால் புரோட்டா சாஃப்ட்டாக இருப்பதோடு லேசான இனிப்பு தன்மையைக் கொடுக்கும். 1 முட்டையை உடைத்து ஊற்றுங்கள். நன்றாகக் கலக்குங்கள். அடுத்து, மைதா மாவைபோட்டு நன்றாகப் பிசையுங்கள். தண்ணீர் போதவில்லை என்றால் தண்ணீரை கையில் எடுத்து தெளித்துக்கொண்டு மாவு பிசையுங்கள். நன்றாக மாவு பிசைந்தவுடன் மாவை டேபிளில் எடுத்து போட்டுக்கொள்ளுங்கள். இப்போது மாவை 5 நிமிடம் நன்றாகப் பிணையுங்கள். மாவை எந்த அளவுக்கு பிசைந்து பிணைகிறீர்களா அந்த அளவுக்கு சாஃப்ட்டாக இருக்கும். பிறகு, மாவை ஒரே உருண்டையாக்கி ஒரு ஈரத்துணி போட்டு அப்படியே ஒரு 10 நிமிடம் அப்படியே மூடி வைத்து விடுங்கள்.
இப்போது மாவை மீண்டும் ஒரு 5 நிமிடம் நன்றாகப் பிணையுங்கள். மீண்டும் மாவை ஒரே உருண்டையாக்கி ஒரு ஈரத்துணி போட்டு மறுபடியும் ஒரு 10 நிமிடம் அப்படியே மூடி வைத்து விடுங்கள். நன்றாக ஊறிய பிறகு திறந்து பார்த்தால் மாவு நன்றாக சாஃப்ட்டாக இருக்கும்.
இப்போது ஒரு கத்தி எடுத்து மாவை துண்டு துண்டுகளாக கட் பண்ணிக்கொள்ளுங்கள். இப்போது டேபிளில் ஒரு பக்கத்தில் எண்ணெய் தடவிக்கொள்ளுங்கள். புரோட்டா பேடா போட வேண்டும். நீங்கள் கடைகளில் பார்ப்பது போல புரோட்டாவுக்கு மாவு ஒரு உருண்டை எடுத்து, பேடா போடுங்கள். பேடாவை ஈரத்துணி போட்டு மூடி அரை மணி நேரம் ஊறவையுங்கள். இப்போது பேடாவை எடுத்து விசிரி வையுங்கள். விசிரி சுருட்டி வைத்த பிறகு, கைகளால் அழுத்துங்கள். அப்போதுதான், புரோட்டா பஃபியாக இருக்கும்.
இப்போது எண்ணெய் விட்டு புரோட்டாவை சுட்டு எடுங்கள். அவ்வளவுதான் சாஃப்ட்டான பஃப்ஃபியான புரோட்டா ரெடி. உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.