குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கார பணியாரம் டேஸ்டாக செய்வது எப்படி என்பதை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
பச்சரிசி – ஒரு கப்
புழுங்கல் அரிசி – ஒரு கப்
உளுந்து – ஒரு கப்
தாளிக்க
கடலை எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு ஒரு டீஸ்பூன்
இஞ்சி துருவல் – ஒரு டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் – 2அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – நறுக்கியது ஒரு டீஸ்பூன்
தேங்காய் துருவல் – ஒரு கப்
வெங்காயம் – நறுக்கியது ஒரு கப்
உப்பு தேவையான அளவு
செய்முறை
முதலில் பச்சரிசி, புழுங்கள் அரிசி, உளுந்து இவைகளை நன்றாக ஊறவைத்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். இந்த மாவு 8 மணி நேரம் புளிக்க வேண்டும். இட்லிக்கு எடுத்த மாவு மீதி இருந்தாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதன்பிறகு ஒரு கடாய் வைத்து அதில், எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, வெங்காயம் ஆகியவற்றை சேர்ந்து நன்றாக தாளிக்கவும்.
இந்த தாளிப்பில், இறுதியாக ஒரு கப் தேங்காய் துருவல், தேவையான அளவு உப்பு சேர்த்து, 8 மணி நேரம் புளித்த மாவில் சேர்ந்து நன்றாக கலக்கவும்.
இறுதியாக பணியார சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, ஒவ்வொரு குழியிலும், மாவை ஊற்றி வேகவைத்து எடுத்தால் சுவையான கர பணியாரம் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“