இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது, இதனால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது. சுண்டக்காய் பொடியை வழக்கமாக உட்கொள்வது சோர்வு, பலவீனம் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற இரத்த சோகையின் அறிகுறிகளைப் போக்க உதவும் என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன். இதுகுறித்து அவர் தனது யூடியூப் பக்கமான டாக்டர் கார்த்திகேயன் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
மிகவும் ஆரோக்கியம் நிறைந்த சுண்டைக்காய் சட்னி இப்படி செய்து பாருங்க. 15 நிமிடங்களில் ரெடி ஆகிவிடும்.
தேவையான பொருட்கள்
சுண்டைக்காய்
கடலை பருப்பு
உளுந்தம் பருப்பு
சின்ன வெங்காயம்
வத்தல்
தக்காளி
உப்பு
தேங்காய்
புளி
எண்ணெய்
கருவேப்பிலை
கடுகு
செய்முறை:
சுண்டைக்காயை நன்றாக கழுவி இடித்துக்கொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்ற வேண்டும். அதில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
இதனை அடுத்து வத்தல், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். தொடர்ந்து தேங்காய் துருவல், புளி, சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும், அதை ஆறவைத்து மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.
சுண்டைக்காய் இப்படியும் சாப்பிடலாமே !!
இப்போது இதை தாளிக்க ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதை சட்னியில் சேர்த்து கிளரவும். சுண்டக்காய் சட்னி நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.