உங்கள் வீட்டில் ஈவ்னிங் ஸ்நாக்ஸ் எதுவும் இல்லையா, கவலையை விடுங்கள், அவல் இருந்தால் போதும் சூப்பரான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் செய்யலாம்.
Advertisment
உங்கள் வீட்டில் இருக்கும் அவலை வைத்து ஒரு சூப்பரான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பாப்போம். இதை ஈவ்னிங் ஸ்நாக்ஸாக மட்டுமல்லாமல் பிரேக் ஃபாஸ்ட்டாகவும் சாப்பிடலாம்.
வெள்ளை நிற அவலை அரை கப் எடுத்துக்கொள்ளுங்கள். அதை நன்றாகக் கழுவிய பிறகு, கால் மணி நேரம் ஊற வையுங்கள். அவல் ஊறிய பிறகு, தண்ணீரை இருத்துவிட்டு, அதை மிக்சி ஜாரில் போடுங்கள், அதனுடன் கால் கப் அளவு ரவை, 2 டேபிள் ஸ்பூன் தயிர், சிறிது அளவு இஞ்சி சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
இப்போது அரைத்து எடுத்த அவலை குட்டியாக அடையாகத் தட்டி நடுவில் சற்று அழுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.
இட்லி தட்டிலோ அல்லது அதில் வாழை இலையிலோ, அல்லது மந்தாரை இலையிலோ வைத்து கொழுக்கட்டை வேக வைப்பது போல வேக வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு கடாய் எடுத்து ஸ்டவ்வில் வைத்து பற்ற வையுங்கள், அடுத்து கடாயில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், எள்ளு இதையெல்லாம் சேர்த்து பொரிந்ததும், காய்ந்த மிளகாய் சேர்த்துக்கொள்ளுங்கள். இதுகூட, காரத்துக்கு சிறிது அளவு மிளாய்தூள், சிறிது அளவு மஞ்சள், தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். வேக வைத்த அவல் அடையை இதனுடன் சேர்த்து நன்றாக பிரட்டி கலந்து, கடைசியாக கசூரி மேத்தி இறக்கினால், ரொம்பவே சுவையான ஈவ்னிங் ஸ்நாக் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“