பலரின் வீடுகளில் காலையில் டிஃபனுக்கு தேங்காய் சட்னி செய்வது வழக்கமான ஒன்று. இந்த தேங்காய் சட்னியை சில டிப்ஸ் முலம் ரொம்ப நல்ல சட்னியாக செய்வது எப்படி என்று செஃப் வெங்கடேசஷ பட் செய்துகாட்டியுள்ளார்.
வெங்கடேஷ் பட்டின் இதயம் தொட்ட சமையல் யூடியூப் சேனலில், பிரபல சமையல் கலைஞர் செஃப் வெங்கடேஷ் பட், சில டிப்ஸ் மூலம் தேங்காய் சட்னியை எப்படி பிரமாதமாக செய்வது எப்படி என்று செய்து காட்டியுள்ளார். அது என்ன டிப்ஸ், எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.
செஃப் வெங்கடேஷ் பட்டின் கைப்பக்குவத்தில் தேங்காய் சட்னி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேங்காய் சட்னி செய்யத் தேவையான பொருட்கள்:
தேங்காய்,
பச்சை மிளகாய்,
இஞ்சி,
தாளிப்பதற்கு கடுகு கருவேப்பிலை
தண்ணீர் குறைப்பதற்கு கொஞ்சம் பொட்டுக் கடலை
தேவையான அளவு உப்பு
செய்முறை
ஒரு பெரிய தேங்காயின் ஒரு மூடியைத் துருவி வைத்துக்கொள்ளுங்கள். முக்கியமாக, தேங்காயில் கொட்டாங்குச்சியின் கருப்பு பகுதி தேங்காயில் இல்லாத அளவுக்கு அதை நீக்கிவிட்டு தேங்காயைத் துருவி வைத்துக்கொள்ளுங்கள்.
தேங்காய் பயன்படுத்தும்போது ஃப்ரெஷ் தேங்காயைப் பயனப்டுத்த வேண்டும். அப்போதுதான் சுவையாக இருக்கும்.
துருவிய தேங்காயை எடுத்து மிக்ஸி ஜாரில் போடுங்கள். அதனுடன், 50 கிராம் பொட்டுக் கடலை போடுங்கள். உங்களுக்கு தேவையான அளவு காரத்துக்கு 3-4 பச்சை மிளகாய் போட்டுக்க்கொள்ளுங்கள்.
20 கிராம் இஞ்சியை நன்றாகத் தோல் சீவி, சிறுசிறு துண்டுகளகா நறுக்கி போடுங்கள். இவைகளை அரைப்பதற்கு தேவையான கால் டம்ப்ளர் தண்ணீர் ஊற்றுங்கள், தேவையான அளவு உப்பு போடுங்கள்.
இப்போது சட்னியை திரிதிரியாக அரையுங்கள். தேங்காய் சட்னியை மிக்ஸியில் அரைப்பதைவிட, முடிந்த வரை கிரைண்டரில் அரையுங்கள். அரைத்த பிறகு, அதை வேறு பாத்திரத்திற்கு மாற்றுங்கள். அவ்வளவுதான் தேங்காய் சட்னி ரெடி. இப்போது, தேங்காய் சட்னிக்கு தாளிப்பு போட வேண்டும்.
ஒரு பான் எடுத்து ஸ்டவ்வில் வைத்து பற்ற வையுங்கள். அதில் தேங்காய் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் ஊற்றுங்கள். 1 காய்ந்த மிளகாயை துண்டு துண்டுகளகாக் கிள்ளி போடுங்கள். முக்கால் ஸ்பூன் கடுகு போடுங்கள். கடுகு பொரிந்ததும் அரை ஸ்பூன் உளுத்தம்பருப்பு போடுங்கள். உளுத்தம் பருப்பு மெதுவாக பொன்னிறமாக வரும் வரை சூடு பண்ணுங்கள். அடுத்து கருவேப்பிலை ஒரு கொத்து போடுங்கள். அவ்வளவுதான் கேஸ் ஸ்டவ்வை ஆஃப் செய்து விடுங்கள். இந்த தாளிப்பை அப்படியே, அரைத்து வைத்துள்ள தேங்காய் சட்னியில் போடுங்கள். அவ்வளவுதான் சூப்பரான சுவையான தேங்காய் சட்னி தாயர்.