மீல் மேக்கரை மிக்சியில் அரைத்து... கிரேவி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணுங்க; ஓட்டல் பக்கம் போக மாட்டிங்க!
சோயா பீன்ஸில் இருந்து செய்யப்படுகிற சோயா சன்க்ஸ் என்கிற மீல் மேக்கரை அரைத்து சுவையான கிரேவி செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம். இப்படி கிரேவி செய்தால் நீங்கள் ஓட்டல் பக்கம் போகவே மாட்டீர்கள்.
இப்போது ரொம்ப சுவையான மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம். Image Source:
Kayus Kitchen
சோயா பீன்ஸில் இருந்து செய்யப்படுகிற சோயா சன்க்ஸ் என்கிற மீல் மேக்கரை அரைத்து சுவையான கிரேவி செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம். இப்படி கிரேவி செய்தால் நீங்கள் ஓட்டல் பக்கம் போகவே மாட்டீர்கள்.
Advertisment
மீல் மேக்கரை வைத்து சுவையான கிரேவி செய்வது எப்படி என்று காயுஸ் கிச்சன் (Kayus Kitchen) யூடியூப் சேனலில் செய்து காட்டியுள்ளனர்.
இப்போது ரொம்ப சுவையான மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம். இப்படி ஒருமுறை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள், பிறகு, நீங்கள் ஹோட்டலுக்கு போக மாட்டிங்க, வீட்டிலேயே சுவையான மீல் மேக்கர் கிரேவி செய்து சாப்பிடுவீர்கள்.
முதலில் கால் கப் பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நன்றாக நைசாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
நன்றாகக் கொதிக்கிற தண்ணீரில் 1 கப் அளவு மீல் மேக்கரை போட்டு, ஒரு 5 நிமிடம் மூடி வைத்துவிடுங்கள். அதற்கு பிறகு வெளியே எடுத்து, வெந்த மீல் மேக்கரில் இருந்து தண்ணீரை பிழிந்துவிடுங்கள். மீல் மேக்கர் டிரையாக இருக்க வேண்டும். இந்த மீல் மேக்கரை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இப்போது, இதனுடன் ஏற்கெனவே அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை மாவை சேர்த்து, தேவையான அளவு உப்பு போடுங்கள். 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் போடுங்கள், 1/2 தேக்கரண்டி கரம் மசாலா போடுங்கள். 1 தேக்கரண்டி கொத்தமல்லி இலைகளை நன்றாக பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் நன்றாக கலந்து பிசைந்து கொள்ளுங்கள். பிசைந்த பிறகு, சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள்.
இந்த உருண்டைகளை, ஒரு கடாயில் சிறிது அளவு எண்ணெய் விட்டு, நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
இப்போது கடாயில் சிறிது அளவு எண்ணெய் விட்டு, அதில், 1/2 தேக்கரண்டி சீரகம் போடுங்கள், சீரகம் பொரிந்த பிறகு, அரைத்த வெங்காயத்தை சேர்த்துக்கொள்ளுங்கள். நன்றாகக் கலந்துவிடுங்கள். அடுத்து 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாகக் கலந்துவிடுங்கள். பச்சை வாசனை போகிற வரை வதக்குங்கள். அடுத்து, அரைத்த தக்காளி பேஸ்ட் சேர்த்துக்கொள்ளுங்கள். 2 நிமிடம் வதக்குங்கள். நன்றாக பிரிந்து வந்த பிறகு, 1/4 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 1/2 தேக்கரண்டி சோம்பு தூள், 1 தேக்கரண்டி மல்லித்தூள், கிரேவிக்கு தேவையான உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். 1/2 தேக்கரண்டி காய்ந்த மாங்காய் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். காய்ந்த மாங்காய் தூள் இல்லையென்றால், கடைசியாக 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளலாம். இப்போது, மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். பச்சை வாசனை போன பிறகு, 1 கப் அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்போது உப்பு சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். உங்களுக்கு போதுமான அளவு உப்பு போட்டுக் கொள்ளலாம். ரொம்ப திக்காக இருந்தால் சிறிது அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
இதை மூடி வைத்து மிதமான தீயில் ஒரு 6 - 8 நிமிடம் எண்ணெய் எல்லாம் பிரிந்து வருகிற அளவுக்கு கொதிக்க வையுங்கள். கொதித்த பிறகு, ஏற்கெனவே தயார் செய்து வைத்துள்ள மீல் மேக்கர் உருண்டைகளை சேர்த்துக்கொள்ளுங்கள். அடுத்து, 1/2 தேக்கரண்டி கரம் மசாலா சேர்த்துக்கொள்ளுங்கள். இதனுடன் காய்ந்த வெந்தயக் கீரையை 1/2 தேக்கரண்டி அளவு சேர்த்துக்கொள்ளுங்கள். நன்றாகக் கலந்துவிடுங்கள். பிறகு, மூடி வைத்து 2 நிமிடம் கொதிக்க வையுங்கள். கடைசியாக கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கினால், சுவையான மீல் மேக்கர் கிரே தயார். இது போல உங்கள் வீட்டில் செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.