கேசரியை விட ஈஸி; குழந்தைகளுக்கு பிடித்த டேஸ்டி ஸ்வீட்… இப்படி செய்து பாருங்க!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் அப்படியான ரெசிபி தான் இன்று நாம் பார்க்க உள்ளோம். சத்துக்கள் நிறைந்த பொட்டுக் கடலை அல்வா எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் அப்படியான ரெசிபி தான் இன்று நாம் பார்க்க உள்ளோம். சத்துக்கள் நிறைந்த பொட்டுக் கடலை அல்வா எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
100 கிராம் வறுத்த பொட்டுக்கடலையில் 18.64 கி புரோட்டீன், 16.8 கி நார்ச்சத்துக்கள் போன்றவை உள்ளன. எனவே எடை இழப்புக்காக வறுத்த பொட்டுக்கடலை உதவுகிறது. இதில் உள்ள மாங்கனீஸ், ஃபோலேட், பாஸ்பரஸ் மற்றும் காப்பர் போன்றவை இதய நோய்களை குறைக்கும் சத்துக்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.
Advertisment
வறுத்த பொட்டுக்கடலை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. குளுக்கோஸ் ஏற்ற இறக்கங்களை சரி செய்கிறது. வறுத்த பொட்டுக்கடலை புரதத்தின் சிறந்த ஆதாரமாகும். நீங்கள் எடை குறைப்பு பயணத்தில் இருந்தால், வறுத்த பொட்டுக்கடலையை தேர்ந்தெடுங்கள்.
ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்கவும், ஏராளமான நோய்களைத் தடுக்கவும் வறுத்த பொட்டுக்கடலை உதவுகிறது. எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கவும், அசாதாரண எலும்பு உருவாக்கத்திற்கும், எலும்பு பலவீனம், மூட்டு வலிகள் போன்ற நோய்களை தடுக்கவும் பொட்டுக்கடலை உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
Advertisment
Advertisements
பொட்டுக்கடலை – 1 கப்
வெல்லம் – 2 கப் (பொடித்தது)
ஏலக்காய் – 2
உப்பு – ஒரு சிட்டிகை
நெய் – 2 ஸ்பூன்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் 2 கப் வெல்லம் 2 கப் தண்ணீர் சேர்த்து, வெல்லம் நன்றாக கரைந்தபின் மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கடாயில் நெய் ஊற்றி, சூடானதும் ஒரு கப் அளவு பொட்டுக் கடலையை போட்டு நன்றாக வாசம்போகும் வரை வறுக்க வேண்டும். அதனுடன் 5 பாதாம், 5 முந்திரி, 2 ஏலக்காய் சேர்த்து அடுப்பை மீடியம் ஃபிளேமில் வைத்து நன்றாக பொன் முறுவலாக வறுத்து எடுத்து மிக்சியில் அரைத்து பொடியாக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
நெய்யம், பொட்டுக்கடலை மாவும் சேர்த்து நன்றாக வறுபட்டபின், அதில் ஏற்கனவே தயாராக வைத்திருந்த வெல்லப்பாகை சேர்க்க வேண்டும். நன்றாக கரண்டியால் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். அல்வா போல் அனைத்தும் ஒன்றாக திரண்டு வரும். இடை இடையே நெய் சேர்த்து கிளறவும். கடாயில் ஒட்டாமல் அல்வா போல திரண்டு வந்ததும் ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி பீஸ் போட்டு கொள்ளலாம். அவ்வளவு தான்… அட்டகாசமான பொட்டுக்கடலை அல்வா தயார்..!
சுவையான, ஆரோக்கியமான, குழந்தைகளுக்கு பிடித்த ஈவ்னிங் ஸ்னாக் தயார். பள்ளியில் இருந்து சோர்வடைந்து வீடு வரும் குழந்தைகளுக்கு இந்த ஸ்னாக்ஸை கொடுத்தால் மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள்.