குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் என்ன செய்து தருவது என்று தெரியாமல் இருக்கிறீர்களா? அப்போ டீக்கடை மற்றும் பேக்கரிகளில் கிடைக்கும் பிஸ்கட் செய்து கொடுங்கள்.
வெறும் மூன்று பொருட்களை வைத்து வீட்டிலேயே எளிமையாக பிஸ்கட் செய்வது பற்றி மெட்ராஸ் சமையல் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
சர்க்கரை அல்லது நாட்டுச்சர்க்கரை
நெய்
ஏலக்காய்
கோதுமை மாவு
உப்பு
செய்முறை
சர்க்கரையை அரைத்து பொடி செய்து வைக்க வேண்டும். இதற்கு நாட்டுச் சர்க்கரை வெள்ளை சர்க்கரை எது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
சர்க்கரை பொடி செய்ய சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை அதனுடன் ஏலக்காய் சேர்த்து அரைத்து பொடியாக்கி வைக்கவும்.
Tea Kadai Biscuit Recipe | Wheat Biscuit with 3 Ingredients (No butter) | Cooker Biscuit in Tamil
இப்போது ஒரு பவுலில் 100 கிராம் நெய் சேர்த்து விஸ்க் வைத்து நன்கு கரைத்து அதில் பவுடர் செய்து வைத்த சர்க்கரை பொடி சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின்னர் அதில் 150 கிராம் கோதுமை மாவு சளித்து சேர்த்து கை வைத்து பிசைய வேண்டும் மாவு சாஃப்டாக்க இருக்க வேண்டும்.
இதனை பிஸ்கட் வடிவில் திரட்டி வைக்கவும். இப்போது இதை இட்லி தட்டில் வைத்து வேக வைக்கலாம்.
இதை குக்க,ர் மைக்ரோவேவ் அவன், கனமான கடாய் எதில் வேண்டுமானாலும் வைத்து வேகவைத்து எடுக்கலாம்.