மாலை நேரத்தில் சாப்பிட சுவையான வாழைக்காய் பஜ்ஜி டீக்கடை ஸ்டைலில் எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
வாழைக்காய் – 2
கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – அரை கப்
மிளகாய்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்
ஆப்ப சோடா – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் வாழைக்காயை நன்றாக கழுவி, மேல்பகுதி மற்றும் கீழ் பகுதியை வெட்டிவிட்டு, அதை பஜ்ஜி போடும் அளவுக்கு வெட்டி எடுத்துக்கொள்ளவும்.
அதன்பிறகு ஒரு பாத்திரத்தில், கடலை மாவு, அரிசிமாவு, மிளகாய்தூள், பெருங்காயத்தூள், ஆப்ப சோடா, உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும்.
இந்த கலவையை நன்றாக கலக்கி பஜ்ஜி பதத்திற்கு வைத்துவிட்டு, அதில், சீவிய வாழைக்காயை அதில் முக்கி எடுத்து எண்ணெயில் பொறித்து எடுத்தால் சுவையான வாழைக்காய் பஜ்ஜி தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“