தயிர் வீட்டில் எப்படி உறைய வைப்பது. அதுவும் தண்ணீர் இல்லாமல் கெட்டியான தயிர் எப்படி செய்வது என்று குழப்பமாக உள்ளதா? இந்த முறையை பின்பற்றுங்கள் கெட்டியான தயிர் வீட்டில் எளிமையாக செய்யலாம். கெட்டியான தயிர் செய்வது பற்றி ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
முழு கொழுப்புள்ள பால்
கெட்டியான தயிர் - 3 மேசைக்கரண்டி
கெட்டியான தயிர் செய்வது எப்படி? | How To Make Thick Curd Recipe In Tamil | Homemade Curd Recipe
செய்முறை:
தயிரை மண் பானையில் செய்தால் மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். அதனால் நல்ல மண்பானை எடுத்து கொள்ள வேண்டும்.
முதலில் முழு கொழுப்புள்ள பாலை கொதிக்க வைத்து சிறிது நேரம் ஆறவிடவும். கொதிக்க வைத்த பால் மிகவும் சூடாக இல்லாமல் மிதமான சூட்டில் இருக்கும் போது தயிர் சேர்த்து பாலுடன் நன்கு கலந்து விடவும்.
இதனை நன்கு கலந்ததும் பாலை மண்பானையில் மாற்றி மூடி போட்டு வைக்கவும். ஒரு 8 மணி நேரம் மண்பானையை அறை வெப்பநிலையில் வைக்கவும். பிறகு எடுத்து பார்த்தால் தண்ணீர் இல்லாமல் கெட்டியாக இருக்கும் தயிர் ரெடியாகிவிடும்.