உணவு என்றாலே பிடிக்கும். சுவையான உணவு, விதவிதமான உணவு சாப்பிட வேண்டும் என்று விரும்புவோம். அதேசமயம் ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது அவசியம். கடைகளில் சுவைக்காக கெமிக்கல் கலந்த பொருட்கள் சேர்க்கப்படும். அந்த உணவுகள் சாப்பிடுவது உடல் நல பாதிப்பு ஏற்படும். கடைகளிலும் கூட ஆரோக்கிய உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது. சமோசா, பப்ஸ் போன்ற ஸ்நாக்ஸ் வகைகளுக்கு டொமேட்டோ கெட்சப் வைத்து சாப்பிடுவோம். ஏன் வீட்டில் செய்யும் நூடுல்ஸ் வகைகளுக்கு கூட கெட்சப் சேர்த்து சாப்பிடுவோம். அந்த வகையில் வீட்டிலேயே சுலபமாக டொமேட்டோ கெட்சப் செய்வது குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தக்காளி பழுத்தது – 10
தண்ணீர் – 1 கப்
கிராம்பு – 6
பட்டை – 1 துண்டு
மிளகு – 1 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
சர்க்கரை – 2 ஸ்பூன்
வினிகர் – 1 டீஸ்பூன்
செய்முறை
தக்காளியை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து தண்ணீர் ஊற்றி,பட்டை, கிராம்பு, மிளகு, நறுக்கிய தக்காளி சேர்த்து 30 நிமிடம் வரை வேகவிடவும். தக்காளி நன்கு வெந்ததும் ஆறவிட்டு
மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பின் தக்காளி விழுதை வடிகட்டவும்.
இப்போது மீண்டும், அடுப்பில் கடாய் வைத்து வடிகட்டிய தக்காளி விழுது ஊற்றி கொதிக்கவிடவும். 5 நிமிடம் கழித்து இதில் உப்பு மற்றும் சர்க்கரை போட்டு கிளறவும். கெட்சப் பதத்திற்கு வந்ததும் வினிகர் சேர்த்து கலக்கவும். கெட்சப்பின் ஈரம் நீங்கி, கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும். அவ்வளவு தான் தக்காளி கெட்சப் இப்போது தயார். நன்கு ஆறியப்பின் கண்ணாடி ஜாடியில் போட்டு பிரிட்ஜ்ஜில் வைத்தால் 1 மாதம் வரை கெடாமல் இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/