இன்றைய அவசர உலகில், பல பாரம்பரிய உணவு வகைகளை நாம் மறந்து வருகிறோம். ஆனால், சில ரெசிபிகள் இன்றும் நம் மனதிலும், நாவிலும் நீங்காத இடம் பிடித்திருக்கும். அப்படி ஒரு அற்புதமான, மறந்து போன பாரம்பரிய ரெசிபிதான் செட்டிநாடு கற்கண்டு வடை.
Advertisment
வெறும் நான்கு பொருட்களைக் கொண்டு, எளிமையாகச் செய்யக்கூடிய இந்த வடை, அதன் தனித்துவமான சுவையால் அனைவரையும் கவர்ந்திழுக்கும். அப்படிப்பட்ட வடையை வீட்டில் எப்படி செய்வது என்று செஃப் தீனா கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
உளுந்து - 200 கிராம் பச்சரிசி - 50 கிராம் கற்கண்டு - 150 கிராம் எண்ணெய்
Advertisment
Advertisements
செய்முறை:
முதலில், 200 கிராம் உளுந்தையும், 50 கிராம் பச்சரிசியையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு, அவற்றை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
மாவு சற்று கெட்டியாக இருக்கும்போது, நசுக்கிய கற்கண்டை சேர்த்து, வடை மாவு பதத்திற்கு கெட்டியாக அரைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், அரைத்து வைத்த மாவைச் சிறு உருண்டைகளாக எடுத்து, பிளாஸ்டிக் கவரில் வைத்துத் தட்டி, நடுவில் ஒரு ஓட்டை போட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
வடை பொன்னிறமாக மாறி, நன்கு வெந்ததும் எண்ணெயில் இருந்து எடுக்கவும். சுவையான கற்கண்டு வடை தயார். இந்த வடை சூடாகச் சாப்பிடுவதை விட, ஆறிய பின் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.