Advertisment

ஹோட்டலில் செய்கிற மாதிரி... மொறு மொறுனு உளுந்து வடை இப்படி செய்ங்க.. டேஸ்ட்டியா இருக்கும்

ஹோட்டலில் செய்கிற மாதிரி, மொறு மொறுனு உளுந்து வடையை டேஸ்ட்டா வீட்டில் செய்ய நினைக்கிறீர்களா, உங்களுக்காக மொறு மொறுனு கிரிஸ்பியா, ரவுண்டா டேஸ்ட்டா உளுந்து வடையை வீட்டிலேயே செய்ய டிப்ஸ் இதோ.

author-image
WebDesk
New Update
ulundhu vadai 1

ஹோட்டலில் செய்கிற மாதிரி, மொறு மொறுனு உளுந்து வடையை டேஸ்ட்டா வீட்டிலேயே செய்யலாம்.

உளுந்து வடை, மெதுவடை பலருக்கும் பிடித்தமானது. அதுவும் மொறு மொறுனு, கிரிஸ்பியா சுவையாக செய்து சாம்பார், சட்னி போட்டு சாப்பிட்டால் உங்கள் நாக்கு உளுந்து வடைக்கு அடிமையாகிவிடும். ஆனால், நம்ம வீட்டில் இந்த உளுந்து வடையை என்னதான் மெனக்கெட்டு பார்த்து பார்த்து செய்தாலும், ஹோட்டலில் செய்கிற உளுந்து வடையைப் போல, வருவதில்லை. பார்க்க நல்ல வடிவமாக இருக்காது, எண்ணெய் நிறைய இருக்கும், கிரிஸ்பியா இருக்காது, அல்லது ரொம்ப கிரிஸ்பியா இருக்கும். அதனாலேயே, பலரும் ஹோட்டல்களில் செய்கிற உளுந்து வடையை சாப்பிட விரும்புவார்கள்.

Advertisment

ஹோட்டலில் செய்கிற மாதிரி, மொறு மொறுனு உளுந்து வடையை டேஸ்ட்டா வீட்டில் செய்ய நினைக்கிறீர்களா,  உங்களுக்காக மொறு மொறுனு கிரிஸ்பியா, ரவுண்டா டேஸ்ட்டா உளுந்து வடையை வீட்டிலேயே செய்ய டிப்ஸ் இதோ. இப்படி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை

உளுந்து 1 1/2 கப் எடுத்துக்கொள்ளுங்கள், பச்சரிசி 1 1/2 டேபிள் ஸ்பூண் எடுத்துக்கொள்ளுங்கள்.

உளுந்து, பச்சரிசியையும் சேர்த்து நன்றாக 2, 3 முறை கழுவ வேண்டும். பிறகு, நல்ல்ல தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

அதில் 2 மணி நேரம் வெளியே ஊற வைக்க வேண்டும், 1 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து ஊற வைக்க வேண்டும். 

ஊறவைத்த உளுந்தை மிக்ஸியில் அறைக்க வேண்டாம், கிரைண்டரில் அறைக்க வேண்டும். ஒருவேளை கிரைண்டர் இல்லை என்றால், மிக்ஸியில் நன்றாக அறைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு, அறைத்து வைத்த மாவை ஒரு 5 நிமிடம் நன்றாக கலக்க வேண்டும்.

சிறிது அளவு இஞ்சி துருவியது, பொடிப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக துருவிய தேங்காய், சீரகம் 1 டேபிள் ஸ்பூண், மிளகு தட்டிப்போட்டது 1 டேபிள் ஸ்பூண், பெருங்காயம் சிறிது அளவு,  பொடியாக நறுக்கிய கரிவேப்பிலை,  தேவையான அளவு உப்பு அனைத்தையும் சேர்த்து 5 நிமிடம் நன்றாக சேர்த்து கலக்கி அடியுங்கள்.

பிறகு, அந்த மாவை கையில் நன்றாக ரவுண்டாக அளவாக எடுத்து, காய்ந்த எண்ணெயில் விட்டு உளுந்து வடை சுட வேண்டும். ஓரளவு வெள்ளையாக பொரிந்து வரும்போது வடையை எடுத்து வெளியே வைத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் வடிந்த பிறகு, மீண்டும் அந்த வடையை வானலியில் காய்ந்த எண்ணெயில் விட்டு பொரிக்க வேண்டும். அப்படி செய்யும்போது, உளுந்து வடை மொறுமொறுனு கிரிஸ்பியா டேஸ்ட்டா இருக்கும். இப்படி செய்யும்போது, எவ்வளவு நேரம் ஆனாலும் உளுந்துவடை மொறுமொறுனு இருக்கும். 

அவ்வளவுதான், எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாத, மொறுமொறுனு கிரிஸ்பியா ஹோட்டலில் செய்கிற மாதிரி உளுந்துவடை தயார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment