உளுந்துவ வடை சுடும்போது நடுவில் போடும் ஓட்டை சரியாக வரவில்லை? மாவு எண்ணெயில் கரையும் பதத்தில் வருகிறதா? இல்லை மாவு திரட்டி எண்ணெயில் போட முடியவில்லையா? இனி கவலை வேண்டாம். இந்த ஒரு டிப்ஸ் போதும் நல்ல சுவையான உளுந்தவடை செய்வதற்கு.
தேவையான பொருட்கள்
உளுந்தம் பருப்பு
சின்ன வெங்காயம்
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
உப்பு
மல்லி இலை
சமையல் எண்ணெய்
தேங்காய் ஓடு
செய்முறை
உளுந்தம் பருப்பினை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் கழுவி கிரைண்டரில் இட்டு கெட்டியாகவும் மையாகவும் ஆட்டவும்.
மாவினை அரைக்கும் போது சிறிதளவு தண்ணீரை தெளித்துக் கொண்டே அரைக்க வேண்டும். மாவில் சிறிதளவினை எடுத்து தண்ணீரில் போட்டால் அது மிதக்கும். இதுவே மாவினை வெளியே எடுக்க தேவையான பதம் ஆகும்.
அட இவ்ளோ நாளும் இந்த சீக்ரெட் தெரியாம போச்சே
மாவினை கரைப்பதற்கு முன்பு சிறிதளவு உப்பினைச் சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் மாவுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லி இலை ஆகியவற்றை சேர்த்து கரைக்கவும்.
கடாயில் எண்ணெயை ஊற்றி காய விடவும் பின்னர் ஒரு தேங்காய் ஓடு எடுத்து அதன் பின்பக்கம் தண்ணீரில் நனைத்து அதன்மேல் மாவை வைத்து வடைப்போல் திரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
மாவு கரையாமல் அழகான சுவையான மெதுவடை கிடைக்கும்.