பலரும் வீட்டில் பூரி செய்யும்போது, சாஃப்ட்டாக புஸ்ஸுன்னு செய்ய முடியவில்லை என்று சிரமப்படுகிறார்கள். இதுதாங்க பூரி புஸ்ஸுன்னு உப்பி வருவதற்கான ரகசியம். உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.
பூரி, சப்பாத்தி எல்லாம் வட இந்திய உணவுகளாக இருந்தாலும் தென்னிந்திய மக்களாலும் விரும்பி சாப்பிடப் படும் உணவாக மாறியிருக்கிறது. பலரும் வீட்டில் பூரி செய்யும்போது, சாஃப்ட்டாக புஸ்ஸுன்னு செய்ய முடியவில்லை என்று சிரமப்படுகிறார்கள். அவர்களுக்காக பூரி புஸ்ஸுன்னு செய்ய ஒரு சூப்பரான டிப்ஸ் தருகிறோம்.
நீங்கள் வழக்கம் போல, பூரிக்கு மாவு பிசைந்து பூரி சுடுவதற்கு நன்றாக வட்டமாக மாவு தேய்த்துக்கொள்ளுங்கள். அவற்றை அப்படியே எண்ணெயில் போட்டு பொரிக்காதீர்கள். பூரி புஸ்ஸுன்னு உப்பி வர வேண்டுமா? அப்படி என்றால், நீங்கள் தேய்த்த பூரி மாவை அப்படியே ஒரு மூடி போட்டு மூடி உங்கள் வீட்டில் ஃபிரிட்ஜில் ஒரு 10 நிமிடம் வைத்துவிடுங்கள்.
பிறகு, நீங்கள் 10 நிமிடம் கழித்து தேய்த்து வைத்த அந்த பூரி மாவை எடுத்து எண்ணெயில் போட்டதுமே புஸ்ஸுன்னு உப்பி வரும். வெந்ததும் அந்த பூரியை எடுத்துப் பாருங்கள், அதில், எண்ணெயும் அதிகம் இருக்காது. சாஃப்ட்டாகவும் புசுபுசுன்னு உப்பியும் வந்திருக்கும். சுவையாகவும் இருக்கும். இதுதாங்க பூரி புஸ்ஸுன்னு உப்பி வருவதற்கான ரகசியம். உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.