பிரசாதமாக வழங்கப்படும் '’அக்கார வடிசல்'’ இதனுடைய சுவையும் மணமும் சூப்பராக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு உணவு. டேஸ்டியான அக்கார வடிசல் கோயில்களில் கொடுக்கும் பிரசாத சுவையில் வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்:
பாசி பருப்பு, பச்சரிசி, வெல்லம், பால், ஏலக்காய், நெய், முந்திரி
பாசி பருப்பை சிறிதளவு நெய்யில் வறுத்துக் கொள்ளவும். பாசி பருப்பை அரிசியுடன் சேர்த்துக் களைந்து இருமடங்கு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். பாதி வெல்லத்தை சிறிதளவு நீரில் கரைத்து சிறிதளவு கொதிக்க வைத்து, வேகும் அரிசி பருப்புக் கலவையில் விடவும்.
எல்லாம் சேர்ந்து ஒன்று சேரக் கொதித்து, வெல்ல வாசனை நீங்கி, அரிசி வெந்து வந்தபின், நெய், ஏலக்காய்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு சேர்த்துக் கலக்கி, சுடச் சுடப் பரிமாறவும் (அரிசி வேக வேக தேவையானால் இன்னும் கொஞ்சம் பால் விடலாம்). சுவையான அக்கார வடிசல் ரெடி..!