சாக்லேட் வாங்க இனி கடைக்குப் போக வேணாம்... உங்க வீட்டுலயே இப்படி செஞ்சு சாப்பிடுங்க!

Home made chocolate: 5 ஸ்டார் சுவையில் வீட்டிலேயே சாக்லேட் செய்வது பற்றி பார்ப்போம்.

Home made chocolate: 5 ஸ்டார் சுவையில் வீட்டிலேயே சாக்லேட் செய்வது பற்றி பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
chocolate

வீட்டிலேயே மெமிக்கல் ஏதும் கலக்காமல் ஆர்கானிக் முறையில் எளிதாக சாக்லேட் செய்வது பற்றி பார்ப்போம். இந்த சாக்லேட் 5 ஸ்டார் சுவையில் இருக்கும். 

Advertisment

தேவையானவை

பாதாம், முந்திரி 
சர்க்கரை
கொக்கோ பவுடர்
 பால் பவுடர்
வெண்ணெய்
நெய்

செய்முறை 

Advertisment
Advertisements

ஒரு தட்டு எடுத்து அதில் நெய் தடவி வைக்கவும். அடுத்து அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் வெறும் கடாயில் நறுக்கிய  பாதாம், முந்திரி சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். இதன் பின் அதை தனியாக எடுத்து வைத்து அதே கடாயில்  1 கப் அளவு சர்க்கரை அரை கப் தண்ணீர் சேர்த்து வறுக்கவும். சர்க்கரை பாகு ரெடி ஆகிவிடும்.  

அடுப்பை அணைத்து சர்க்கரை பாவில் கொக்கோ பவுடர் சளித்து சேர்க்கவும். அடுத்து இதே போல் பால் பவுடரையும் சளித்து சேர்க்கவும். இதை கட்டி இல்லாமல் கரைத்து விடவும். 

இப்போது இதில் பட்டர், வறுத்து வைத்த நட்ஸ் சேர்க்கவும். எல்லாவற்றையும் கலந்து விடவும். இப்போது இதை ஸ்பூன் கொண்டு ஏற்கனவே நெய் தடவி வைத்த கடாயில் ஊற்றவும். கொஞ்சம் சூடு ஆறிவும் ஃபீரிசரில் வைத்து எடுக்கவும். அரை மணி நேரத்திற்கு பின் எடுத்து தேவையான வடிவில் நறுக்கி கொள்ளலாம். அவ்வளவு தான்  சுவையான சாக்லேட் ரெடி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: