கிருஷ்ண ஜெயந்திக்கு, இப்படி பால்பாயாசம் செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி 1 கப்
400 எம் எல் பால்
250 கிராம் சர்க்கரை
2 கிராம் குங்குமப் பூ
1 கைபிடி திராட்சை
1 கைபிடி முந்திரி
அரை கப் நெய்
செய்முறை : குக்கரில் அரிசியை நன்றாக தண்ணீர் ஊற்றி 5 விசில் விட்டு வேக வைக்கவும். தொடர்ந்து குக்கரை திறந்து கொதிக்க வைக்கவும். தொடர்ந்து அதில் பாலை ஊற்ற வேண்டும். தொடர்ந்து இதில் குங்குமப் பூவை சேர்த்து கிளரவும். தொடர்ந்து பாதி நெய்யை இதில் சேர்த்து கிளரவும். தொடர்ந்து மீதி நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து இதில் சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து சர்க்கரை சேர்த்து கிளரவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“